`காத்துவாக்குல ரெண்டு காதல்` படத்தை மொபைலிலேயே பார்ப்பது எப்படி?
விஜய் சேதுபதி- நயன்தாரா- சமந்தா நடித்துள்ள இப்படம் உலகம் முழுக்க இன்று வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி- நயன்தாரா- சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முக்கோணக் காதல் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம் உலகம் முழுக்க இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் இருநாயகிகளுள் ஒருவரான சமந்தாவின் பிறந்த நாளும் இன்றுதான். கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | தெலுங்கில் ஹிட்களை கொடுத்த பல்லாவரம் யசோதா - சமந்தாவின் சுவாரஸ்ய பின்னணி
அதன்படி, இப்படத்தின் வெளியீட்டுக்குப் பின்பான ஓடிடி உரிமையை டிஷ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். அதேபோல இப்படத்தின் டிவி உரிமையையும் பிரபல டிவி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறதாம்.
திரைக்கு வந்தபின் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு தேதி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதனால் சுமார் ஒரு மாதம் கழித்தே படங்கள் ஓடிடிக்கு வருகின்றன. அந்த வகையில் இப்படம் வருகிற ஜூன் மாதம் ஓடிடிக்கு வரவுள்ளதாம். திரையரங்கில் படத்தைக் காணத் தவறவிட்ட சினிமா பிரியர்கள் வீட்டிலிருந்தே ஓடிடியிலும் கண்டுகளிக்க முடியும்.
மேலும் படிக்க | OTTயில் வெளியாகும் பொன்னியின் செல்வன்! - எத்தனை கோடி பிசினஸ் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR