`தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா` சொல்லியடித்த ஜெயிலர்... மூன்றே நாள்களில் இத்தனை கோடியா...!
Jailer Collection Day 3: ஜெயிலர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படத்தின் முதல் மூன்று வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
Jailer Collection Day 3: ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (ஆக. 10) வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல்வேறு பகுதிகளின் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. படம் தமிழ்நாட்டின் 90 சதவீத திரைகளில் வெளியாகியிருக்கிறது. மேலும், கர்நாடகாவிலும் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ் திரைப்படம் அங்கு பெருமளவில் திரையிடப்பட்டு வசூலையும் வாரி குவித்து வருகிறது எனலாம்.
முதல் நாள்
ரஜினிக்கு கிடைக்கும் ஓப்பனிங் வசூல் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஜெயிலர் படத்தின் முதல் நாள் டிக்கெட்டுகள் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் எங்குமே பெருமளவில் கிடைக்கவில்லை என கூறப்பட்டது. அதன்மூலம், படத்திற்கான எதிர்பார்ப்பை புரிந்துகொள்ளலாம். படமும் நல்ல வரவேற்பை பெற்றதால், அந்த முதல் நாள் கூட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் வந்துகொண்டிருக்கிறது. மேலும், முதல் நாள் வசூலாக ஜெயிலர் ரூ. 48.35 கோடியை குவித்ததாக தகவல்ள் தெரவிக்கப்பட்டன. குறிப்பாக, தமிழ்நாட்டில் ரூ. 37.6 கோடியும், ஆந்திரா - தெலங்கானாவில் ரூ. 10. 2 கோடியும் வசூலாகியுள்ளது.
இரண்டாம் நாள்
இரண்டாம் நாளான நேற்றும் (ஆக. 11 - வெள்ளிக்கிழமை) ஜெயிலர் நல்ல வசூலை குவித்தது. நேற்று ஒரே நாளில் ரூ. 26.56 கோடியை உலகம் முழுவதும் வசூலித்துள்ளது. இதில், தமிழ் மற்றும் தெலுங்கு பகுதிகளில் முறையே ரூ. 21.52 கோடி மற்றும் ரூ. 4.71 கோடி வசூலாகியுள்ளது. கன்னடா மற்றும் இந்தி வெர்ஷன்கள் ரூ. 20 லட்சம், ரூ. 13 லட்சங்களை குவித்துள்ளது.
மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ரஜினி ரசிகராக மாறிய விஜய்யின் மகன்..!
ரூ. 100 கோடி
முதல் நாளை விட இரண்டாம் நாளில் சற்று வசூல் குறைவு என்றாலும், விடுமுறை தினமான இன்று (மூன்றாம் நாள்) ஜெயிலர் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என கூறப்படுகிறது. அதன்பேரில், மூன்றே நாள்களில் ரூ. 100 கோடி வசூலை தாண்டி ஜெயிலர் சாதனை படைக்க உள்ளதாக சினிமா வல்லுநர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலானால், மூன்று பேரில் சுமார் ரூ. 104 கோடியை ஜெயிலர் வசூல் செய்யும் என கூறப்படுகிறது.
அடுத்த ஒரு வாரம்
ரஜினி மட்டுமின்றி மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், விநாயகன், தமன்னா என பெரும் நட்சத்திர பட்டாளமே ஜெயிலர் படத்தில் நடித்துள்ளது. முதல் பாதியின் வேகமும், இரண்டாம் பாதியின் ட்விஸ்ட்களும் படத்தை விறுவிறுப்பாக கொண்டுசெல்வதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொது பார்வையாளர்களிடம் படம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுவிட்ட நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மட்டுமின்றி, அடுத்த ஒரு வாரத்திற்கு கலெக்சனில் ஜெயிலர் கல்லாக்கட்டப்போகிறார் என்பது உறுதி.
ரஜினிக்கு அண்ணாத்த திரைப்படமும், நெல்சனுக்கு பீஸ்ட் திரைப்படமும் கொடுத்த பின்னடவை, ஜெயிலர் திரைப்படம் மறக்கடித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். அனிருத்தின் இசை ஒருபக்கம் மிரட்ட, கேமராவும் திரைப்படத்தில் புகுந்து விளையாடியுள்ளது. ரஜினியின் மாஸ் சீன்கள், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, சுனில் ஆகியோரின் காமியோக்கள் திரைக்கதையில் கச்சிதமாக பொருந்தி வரவே இந்த வெற்றி கைக்கூடியுள்ளது.
மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படம் குறித்து நெல்சனிடம் பேசிய விஜய்..! என்ன சொன்னார் தெரியுமா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ