Seetha Raman Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல், சீதா ராமன். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கார்த்திகை தீபம், மாரி, அண்ணா, சந்தியா ராகம் போன்ற தொடர்களும் பரவலான வரவேற்பை பெற்றுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டிக் கொடுத்த லைவ் லொகேஷன்


அந்த வகையில் மக்களிடம் பிரபலமான சீதா ராமன் சீரியலில் நேற்றைய எபிசோட் மிகவும் பரபரப்பாக இருந்தது. ரவுடிகள் சீதாவை சிமெண்ட் தொட்டிக்குள் வைத்து உயிரோடு புதைக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இறங்கினர். அதை தொடர்ந்து, இன்று (நவ. 16) நடக்கப் போவது என்ன மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், அதுகுறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதுகுறித்து இதில் காணலாம்.  


அதாவது வீட்டில் மீராவுக்கு மகா மீது சந்தேகம் வந்து இதுகுறித்து கேட்டுக் கொண்டிருக்க ராமுக்கு காலையில் சீதா, 'நீங்க எக்ஸாம் முடிச்சிட்டு வாங்க, நாம சந்திக்கலாம்' என்று சொல்லி லைவ் லொகேஷன் அனுப்பிய விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது.


மேலும் படிக்க | பூஜையை வைத்து ஜாஸ்மின் செய்யும் சூழ்ச்சி! மாரி சீரியல் அப்டேட்!


சிமெண்ட் தொட்டி...


இந்த நேரத்தில் இங்கு ரவுடி ஒருவன் போனை எடுத்து ஆன் செய்துவிட சீதா இருக்கும் லொகேஷன் ராமுக்கு தெரியவந்தது. உடனே ராமு சீதா இடம் இருக்கும் தகவலை காவல்துறைக்கு தெரியப்படுத்தினார். மேலும், ராம், துரை ஆகியோர் சீதா இருக்கும் இடத்திற்கு கிளம்பி வருகின்றனர். 


ரவுடிகள் எஸ்கேப் ஆகிவிட ராம் மற்றும் துரை இருவரும் அவ்விடம் முழுவதும் சீதாவை தேடுகின்றனர். ஆனாலும் சீதாவை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில், திடீரென துரைக்கு சிமெண்ட் தொட்டி மீது சந்தேகம் வர ராம் என சத்தம் போடுகிறார்.


அடுத்தது என்ன?


பிறகு அந்த சிமெண்ட் தொட்டிக்குள் இருந்து சீதாவை ராம் வெளியே கொண்டு வர அவள் சுய நினைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுடன் ஹாஸ்பிடலுக்கு தூக்கிச் செல்கிறான். இங்கே மகா தன்னை எதிர்த்து பேசும் மீராவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று இரவு 7. 30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் நடப்பாண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 செயிலி மூலமும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.


மேலும் படிக்க | லியோ படத்தை பின்பற்றும் சூர்யாவின் கங்குவா! லேட்டஸ்ட் அப்டேட்!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ