பூஜையை வைத்து ஜாஸ்மின் செய்யும் சூழ்ச்சி! மாரி சீரியல் அப்டேட்!

Maari TV Serial Online: நேற்றைய எபிசோடில் போலீஸ் கைது செய்த ஜாஸ்மினை தாரா வெளியே கொண்டு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - RK Spark | Last Updated : Nov 16, 2023, 11:10 AM IST
  • பூஜையை வைத்து ஜாஸ்மின் செய்யும் சூழ்ச்சி.
  • மாரிக்கு நடக்க போவது என்ன?
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
பூஜையை வைத்து ஜாஸ்மின் செய்யும் சூழ்ச்சி! மாரி சீரியல் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் போலீஸ் கைது செய்த ஜாஸ்மினை தாரா வெளியே கொண்டு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஜாஸ்மின் இந்த வீட்டில் இருக்க கூடாது என ஜெகதீஷ் கோபப்பட தாரா அவ நான் சொன்ன ஒரு காரணத்துக்காக முருகனை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவ நம்மள நம்பி வந்த பொண்ணு. அவ பண்ணது தப்பு தான், இந்த ஒருமுறை அவளை மன்னிச்சுடுங்க என்று பேசி ஜாஸ்மினை வீட்டில் தங்க வைக்கிறாள். 

மேலும் படிக்க | சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

மறுபக்கம் மாரி மறுநாள் பூஜை இருக்கு சீக்கிரம் எந்திரிக்கணும் என யோசித்து தூங்க மறுநாள் காலையில் எல்லாருக்கும் முன்பாக எழுந்து கொள்ளும் சூர்யா பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து முடிக்க மாரி எழுந்து பார்க்க தாத்தா எல்லாத்தையும் சூர்யா தான் செய்ததாக சொல்கிறார். அதனை தொடர்ந்து சூர்யாவும் அங்கு வந்து ஏற்பாடுகள் எல்லாம் ஓகேவா என்று கேட்க தாத்தா எல்லாம் சரியா இருக்கு என சொல்கிறார். பிறகு தாரா குடும்பத்தினரும் எல்லாரும் பூஜைக்கு வந்து விடுகின்றனர். இந்த பூஜை முடிந்ததும் சூர்யா மாரி கழுத்தில் தாழம்பூ மாலை போட வேண்டும், அந்த அம்பாள் மாரிக்கும் குழந்தைக்கும் கவசமாக இருந்து காப்பாங்க என்பது தான் ஐதீகம் என்று சொல்கிறார். 

maari

ஜெகதீஷ் மாலையில் பூ நாகம் ஏதாவது இருக்க போகிறது, நல்லா ஒருமுறை பார்த்துடுங்க என்று சொல்ல மறுபக்கம் ஜாஸ்மின் பாம்பாட்டி ஒருவரை சந்தித்து மாலையில் பூ நாகத்தை வைக்க பிளான் போடுகிறாள். அவர் நீங்க மாலையை மட்டும் வெளியே கொண்டு வாங்க, நான் நாகத்தை உள்ள வச்சிடுறேன் என பாம்பாட்டி சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News