யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் -ரஜினிகாந்த்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக விரோத சக்திகளே தூத்துக்குடி கலவரத்துக்கு முக்கிய காரணம் என்று தொடர்ந்ததுடன் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் எனவும் ஆவேசமாக பதிலளித்தார். 


இந்த ஆவேச பதிலை கண்டித்து பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, பலரும் இதற்க்கு கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். மேலும், அவர் பத்திரிக்கையாளர்களை புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில்.........! 


விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்துள்ளார்.