பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் பிஸியாக வளம் வரும் இந்திய நடிகை ராதிகா ஆப்தா, தான் தன்னை ஒரு வெற்றி பெற்ற நாயகியாக கருதவில்லை என தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினி நடிப்பில் உருவான கபாலி, தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தி மற்றும் ஆங்கில படங்களில் தற்போது நடித்து வருகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க படமாக உருவான, தி வெட்டிங் கெஸ்ட் படத்தில் நடித்ததுடன் வேர்ல்டு வார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் போதிலும் தான் நினைத்தபடி இன்னும் தனது வெற்றி எட்டவில்லை என தனது ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில்., "நான் நடித்திருக்கும் தி வெட்டிங் கெஸ்ட் படம் சமீபத்தில் அமெரிக்காவில் வெளியானது.


இதை அடுத்து மேலும் சில ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட்களை படித்து வருகிறேன். புதிய படத்தில் நடிப்பது பற்றி விரைவில் முடிவு செய்வேன். எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னை பொறுத்தவரை மற்றவர்கள் வெற்றி என்று எதை நினைக்கிறார்களோ அதில் இருந்து நான் நினைக்கும் வெற்றி மாறுபட்டதாக இருக்கின்றது.


இன்று வரை நான் என்னை வெற்றி பெற்ற ஹீரோயினாக உணரவில்லை. என் மனதுக்குள் என்ன நினைத்திருக்கிறேனோ அந்த சாதனையை இன்னும் செய்ய வில்லை. அதற்கான நேரம் வரும்போதுதான் நான் வெற்றி பெற்றதாக உணர்வேன்" என தெரிவித்துள்ளார்.