மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் ‘மா மன்னன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விறுவிறுப்பாக இப்படத்தின் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், ’நெஞ்சுக்கு நீதி’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். பாலிவுட்டில் வெளியான ‘ஆர்ட்டிக்கிள் 15’ ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். மே 20 ஆம் தேதி உலகம் முழுவது படம் ரிலீஸாகிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்ப படத்தின் ரீமேக்கில் சில காட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | விடியல முடிவு பண்ணுறது நான்தான் - வெளியானது விக்ரம் ட்ரெய்லர்


அண்மையில் வெளியிடப்பட்ட டிரெய்லரில் கூட சாதி குறித்த குறியீடுகள் இடம்பெற்றிருந்தன. படத்தின் புரோமோஷனுக்காக பல்வேறு யூடியூப் சேனல்களிலும் ‘நெஞ்சுக்கு நீதி’ பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது படம் குறித்து பேசிய நடிகர் உதயநிதி ஸ்டாலின், படம் சிறப்பாக வந்திருப்பதால், அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதில், நெஞ்சுக்கு நீதி டைட்டிலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தான் தேர்ந்தெடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்தப் படத்தை தவிர வேறு எந்தப் படத்துக்கும் இந்த டைட்டில் பொருந்தாது என அவர் கூறியதாகவும், பின்னர் குடும்பத்தில் விவாதித்து ஓகே சொன்னதாகவும் உதயநிதி கூறியுள்ளார்.



தந்தை ஸ்டாலினிடம் நெஞ்சுக்கு நீதி டைட்டில் குறித்து பேசும்போது நல்ல படமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டு ஓகே சொல்லிவிட்டதாக தெரிவித்துள்ளார். அப்பாவைத் தவிர மற்ற குடும்ப உறுப்பினர்களிடமும் இதற்கு ஒப்புதல் பெற்ற பிறகே இந்த டைட்டிலை வைத்ததாக தெரிவித்துள்ள உதயநிதிஸ்டாலின், மா மன்னன் படம் மிகத் தரமாக இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், அந்தப் படம் தன்னுடைய கடைசி படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அந்தப் படத்தை முடித்தவுடன் முழு நேர அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ள அவர், ஏறத்தாழ இதில் உறுதியாக இருப்பதாகவும் காலம் தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.  


மேலும் படிக்க | கமலுடன் இணையும் பா. இரஞ்சித் - விக்ரம் ஆடியோ லான்ச்சில் மாஸ் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1  width="100%"></iframe>