பாகுபலி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக முக்கிய நகரங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். டெல்லி, மும்பை, சண்டீகர் உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவு சோதனை நடைபெற்றது.


இதனைத்தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள பாகுபலி பட தயாரிப்பாளர்களின் வீடுகளிலும் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்


தற்போது இதன் 2-வது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக இதன் இயக்குநர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், நேற்று மாலை ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ், பஞ்சகுட்டா ஆகிய இடங்களில் இத்திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகங்களில் ஒரே சமயத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.