அடிச்சது தப்புதான், கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கோரிய வில் ஸ்மித்
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ள வில் ஸ்மித் கூறியதாவது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2022-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்தது. இதில் முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
அப்போது ஆஸ்கர் விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவியின் உருவகேலி செய்யும் வகையில் கிண்டல் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி கன்னத்திலேயே ஓங்கி அறைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இந்த சம்பவம் நேற்று முதலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவுக்கு முதல் ஆஸ்கர் பெற்று தந்த பானு அதையா 91 வயதில் காலமானார்...
வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ள வில் ஸ்மித் ” வன்முறை அதன் அனைத்து வடிவங்களிலும் விஷமானது மற்றும் அழிவுகரமானது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகளில் எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. எனது செலவில் நகைச்சுவைகள் வேலையின் ஒரு பகுதியாகும், ஆனால் ஜாடாவின் உடல்நிலை குறித்த நகைச்சுவை என்னால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது, நான் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தேன்.
நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், கிறிஸ். நான் வரம்புக்கு வெளியே இருந்தேன், நான் தவறு செய்தேன். நான் வெட்கப்படுகிறேன், எனது செயல்கள் நான் இருக்க விரும்பும் மனிதனைக் குறிக்கவில்லை. அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை.
அகாடமி, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். வில்லியம்ஸ் குடும்பத்தினரிடமும் எனது கிங் ரிச்சர்ட் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மற்றபடி நம் அனைவருக்கும் ஒரு அழகான பயணமாக இருந்ததை எனது நடத்தை கறைபடுத்தியதற்கு நான் ஆழமாக வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | OSCAR Award 2022: கொரோனாவுக்கு மத்தியிலும் ஆஸ்கர் விருது விழா கோலாகலம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR