என்னை பற்றி அவதூறாக எழுதியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்- நடிகை சோனியா அகர்வால் காட்டம்!
தன்னை பற்றி அவதூறாக எழுதியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை சோனியா அகர்வால் கூறியுள்ளார்.
Sonia Agarwal நடிகை சோனியா அகர்வால் 'காதல் கொண்டேன்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழ் திரையுலகத்திற்கு 'காதல் கொண்டேன்' என்ற திரைப்படத்தின் மூலம் தன்னை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் தலை முடியை தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல கன்னட நடிகையான சோனியா அகர்வால் வீட்டில் சோதனை நடத்தி 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே பெயருடன் இருப்பதால் தமிழ் நடிகை சோனியா அகர்வாலை இதில் தவறுதலாக இழுத்து சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனால் கோபமான தமிழ் நடிகை சோனியா அகர்வால் கூறும்போது, ''முதலில் யார் என்பதை உறுதி செய்து எழுதுங்கள். சமூக வலைத்தள வதந்திகளை பற்றி நான் கவலைப்படுவது இல்லை. ஆனாலும் இது ஒரு தீவிரமான விஷயம். என்னை அழைத்தாவது உறுதி செய்து இருக்க வேண்டும். அந்த சோனியா அகர்வால் நான் இல்லை.
நான் தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருக்கிறேன்.'' என்றார். மேலும் “எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்’' என்றும் கூறியுள்ளார்.
ALSO READ மீண்டும் காதலா? விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR