தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதயம் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாரதா பாரதிக்கு ஆதரவாக பேச ஸ்வேதா கோபப்பட்டு உண்மையை சொல்லிடுவேன் என்று மிரட்ட சாரதா நானே உண்மையை சொல்லிடுறேன் என்று ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


ஆதியை பார்த்த சாரதா அதிர்ச்சி 


அதாவது, ஆதியை வீட்டிற்கு அழைத்து வந்த பாரதி அவனுக்கு காபி கொடுக்க பிறகு ஆதியை பார்த்த சாரதா அதிர்ச்சி அடைகிறாள், வீட்டில் எல்லாரும் கூடி விட சாரதா என்னாச்சு என்று கேட்க வழுக்கி விழுந்து விட்டதாக சொல்கிறான் ஆதி. 


மிரட்டும் ஸ்வேதா


எல்லாத்துக்கும் காரணம் பாரதி தான், ராசி இல்லாதவள் என்று ஸ்வேதா பேச சாரதா ஆதியை காப்பாத்திட்டு வருவது பாரதி தான் என்று சப்போர்ட் செய்து பேசி அதிர்ச்சி கொடுக்கிறாள், இதனால் ஸ்வேதா எல்லாரும் கலைது சென்ற பிறகு என்னுடைய வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்ல போறீங்க என்று கேட்க அவங்க வாழ்க்கையை வாழட்டும் விடு என்று சாராத சொல்ல ஸ்வேதா எல்லா உண்மையையும் சொல்லிடுவேன் என்று மிரட்டுகிறாள். 


அதன் பிறகு பாரதியும் தமிழும் சேர்ந்து ஆதியை குளிக்க வைத்து கீழே அழைத்து வந்து சாப்பிட உட்கார வைக்க சாரதா முன்னதாகவே சமைத்து வைத்து ஆதி, பாரதி, தமிழ் என எல்லாரையும் உட்கார வைத்து தனது கையால் பரிமாறுகிறாள். 



மேலும் படிக்க | பிரைம் வீடியோவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் பிளாக்பஸ்டர் படங்கள்! 


இதையடுத்து ஆதி பாரதி ஆகியோர் டாக்டரை பார்க்க வர அவர் ஆதியை காப்பாற்றிய பாரதியை பாராட்ட பாரதி நீங்க அவருக்கு ஆப்ரேஷன் செய்து காப்பாறியதை விட நான் பெருசா எதுவும் செய்யல என்று சொல்கிறாள். அடுத்து ஆதி தனியாக டாக்டரிடம் பேசும் போது தனக்கு இதயம் கொடுத்தவரின் மனைவியை பார்க்க வேண்டும் என்று பேச டாக்டர் அதிர்ச்சி அடைகிறார். ஆதியை சமாளித்து வெளியே வந்த அவர் அறிவுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்ல அவனும் அதிர்ச்சி அடைகிறான். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?


இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | உலகளவில் யூ-டியூபில் ட்ரெண்டாகும் 2 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ