தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதயம் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தமிழ் ஆதிக்கு யாருக்கும் தெரியாமல் லொகேஷனை அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதிர்ச்சி அடையும் ஆதி


அதாவது, ஆதி தமிழ் அனுப்பிய லொகேஷனுக்கு வந்து பார்க்க அந்த பழைய வீட்டில் எல்லாரும் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான், அடுத்து பாரதியும் தமிழும் பவர் இல்லாமல் கொசு கடியில் தூங்க முடியாமல் கஷ்டப்படுவதையும் ஜன்னல் வழியாக பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறான். 



அடுத்து தன்னுடைய நண்பன் செந்திலுக்கு போன் போட்டு உதவி கேட்கிறான், அவன் நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன் மச்சான் என்று போனை வைக்கிறான். இதையடுத்து சரவணன் பாரதி குடும்பத்தை மொத்தமாக அவர்களுக்கே தெரியாமல் இடம் மாற்றுகிறான். 


இவர்கள் காணாமல் போன விஷயத்தை வேலைக்காரி ஸ்வேதாவுக்கு தெரியப்படுத்த இதை கேட்டு அங்கு எல்லாரும் சந்தோசப்படுகின்றனர், ஆதி கீழே வர அந்த குடும்பம் திரும்பவும் ஓடி போய்ட்டாங்க, நம்ம மானத்தை வாங்கிட்டாங்க என்று அறிவு கோபப்படுகிறான். 


விடிந்தால் பாரதி குடும்பத்தினர் மொத்த பேரும் வேறு இடத்தில இருப்பதை பார்த்தும் ஷாக் ஆகின்றனர், பிரம்மாண்ட வீட்டில் தங்கி இருப்பதெல்லாம் தம்பி ஆதியோட ஏற்பாடா தான் இருக்கும் என்று ரத்னம் பேசுகிறார். இதையடுத்து சரவணன் என்ட்ரி எல்லா ஏற்பாட்டையும் பண்ணது நான் தான் என்று பேசுகிறான். 


மேலும் படிக்க | Star Movie Review : கவினின் ‘ஸ்டார்’ படத்திற்கு 5 ஸ்டார் தரலாமா? தெளிவான திரை விமர்சனம்!


ஆதிக்கு போன் போடும் பாரதி


பாரதி ஆதிக்கு போன் போட்டு எதுக்கு ஆதி இப்படி பண்ண? எங்க எல்லாரையும் இடம் மாற்றியது எல்லாம் நீ தானா என்று கேட்க ஆதி நான் எதுவும் பண்ணலயே என்று எதுவும் தெரியாதது போலவே பேசுகிறான். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


இதயம்: சீரியலை எங்கு பார்ப்பது?


இதயம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | பட்டைய கிளப்பும் ரஜினிகாந்த்தின் வேட்டையன் ஷூட் .. இதோ அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ