கன்னியாஸ்திரி பாலியல் புகார்: MLA-வை கழுவி ஊற்றிய நடிகை பார்வதி...!
பொழுது போக்கிற்காக திரைப்படங்களில் என்னவேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், கதைகளின் எல்லைகளை விரிவுபடுத்துவது முக்கியம் என நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்....!
பொழுது போக்கிற்காக திரைப்படங்களில் என்னவேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், கதைகளின் எல்லைகளை விரிவுபடுத்துவது முக்கியம் என நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்....!
கேரளாவின் கோட்டயம் குரவிலங்காடுவில் உள்ள கான்வெண்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ப்ராங்கோ மூலக்கல்(54) என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்து இருந்தார். கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கத்தோலிக்க அமைப்புகளுக்கு எதிராக முதல் முறையாக நேற்று கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி குறித்து கேரளவின் பூஜர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜ் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரன் பேச்சுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இதை தொடர்ந்து, நடிகை பார்வதி எம்.எல்.ஏ. ஜார்ஜ்-ம் சர்ச்சை பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசிய பொது, எம்.எல்.ஏ. ஜார்ஜ்-க்கு எதிரக கடுமையாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த மனிதரின் கருத்து வெறுக்கத்தக்க வாந்தியைப் போன்றது என்றும் அது பற்றி பேசியது போதும். கன்னியாஸ்திரிகளின் தைரியத்துக்கு சல்யூட் என்று நடிகை பார்வதி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தி நடிகை ரவீணா டாண்டனும், இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் களமிறங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், எம்.எல்.ஏ. ஜார்ஜுக்கு, தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், பிராங்கோ முலக்கல் மற்றும் 2 பேராயர்கள், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்தரியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்களை அணுகி, புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படியும், அதற்காக ரூ.5 கோடி தருகிறோம் என்று கூறியதாக கன்னியாஸ்திரியின் சகோதரர் கூறியுள்ளார்.