‘ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது..’இசைஞானி இளையராஜாவிற்கு பிறந்தநாள் இன்று!
Ilaiyaraaja Birthday: இசைஞானி என புகழப்படும் இளையராஜாவிற்கு பிறந்தநாள் இன்று. இதையடுத்து அவர இசையமைத்த பாடல்களும் அவர் குறித்த தகவல்களும் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
1980களில் திரைப்பட இசையமைப்பாளராகவும், இசை இயக்குனராகவும் புகழ் பெற தொடங்கினார் இசைஞானி இளையராஜா. இந்திய இசை உலகில் முதன் முதலில் மேற்கத்திய பாரம்பரிய இசை இணக்கங்களையும், சுவரங்களையும் பயன்படுத்தியவர் இளையராஜா தான். இவர் இசையமைக்கும் படங்களின் பின்னனி இசையும் தனித்துவம் வாய்ந்தவையாக இருந்தன.
இளையராஜா பாட்டை கேட்காதவர்கள், இசை ரசிகர்களாக இருக்கவே முடியாது. 80’ஸ் கிட்ஸ், 90’’ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என பல தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் தனது இசையை ரசிகர்களுக்காக அர்பணித்துள்ளார, இளையராஜா. மூன்று தலைமுறைகளாக இவர் கட்டமைத்துவரும் இசை சாம்ராஜ்யம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
எல்லா இடங்களிலும் ராஜா..
டீ கடை, பேருந்துகள், சுப காரிய வீடுகள், அடிக்கடி கேட்கும் பிலே லிஸ்ட், கைபேசி ரிங்க்டோன், அவ்வப்போது மற்ற இசையமைப்பாளர் படைப்புகளில் என எல்லா இடங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார், இளையராஜா. இந்த இயந்திர வாழ்வில் பலருக்கு இவரது இசைதான் தூக்க மாத்திரைகாளக பயன்படுகின்றன. சோகத்தையும் சுகமாக்க மாற்ற, இசைஞானியால் மட்டுமே முடியும். அவரின் பாடல்கள் மனதை ஊடுருவி செல்லும் வல்லமை பெற்றவவை. மென்மையான காதல் நினைவுகளை பிரதிபலிக்க இசைஞானியின் இசையால் மட்டுமே முடியும். எல்லா காயங்களுக்கும் வலிகளுக்கும் இந்த இவரது பாடல்கள் மருந்தாக அமையும் என்றால் அது மிகையல்ல.
மேலும் படிக்க | பட வேட்டைக்கு தயாரா மக்களே? இந்த மாதம் வெளியாகவுள்ள படங்களில் லிஸ்ட்!
இளையராஜா, சில கவிதைகளுக்கும் இசையமைத்துள்ளார். அது மேற்கத்திய இசையில் தமிழின் நாட்டுப்புறம் கலந்த ஒரு தனித்துவமான கலவையாக இருந்தது. இந்த இசை இந்தியாவின் அனைத்து இசைசூழல்களுக்கிடையேயும் ஒரு புதுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இளையராஜா, இந்த வயதிலும் சிறிதும் தளராமல் அத்தனை மலைகளிலும் ஏறி இசையுலகில் தனிச்சிம்மாசனத்தில் அமர்ந்த பின்பும் கூட ஒவ்வொரு படத்திற்கு இசையமைக்கும் போதும், அவ்வளவு ஆர்வம் காட்டுவாராம். இப்படி அவரது சாதனை குறித்து சொல்லிக்கொண்டே போனாலும் அவர் குறித்த சர்ச்சைகளும் அவ்வப்போது எழுந்து கொண்டே இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
சிக்கலில் சிக்கிக்கொண்ட ராஜா:
சமீப காலமாக, இளையராஜா இசையும் தாண்டி தற்போது பல சர்ச்சரகளில் சிக்கி வருகிறார். இதற்கு காரணம், அவருடைய தலைக்கனம் பேச்சுதான் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். இவர் குறித்து பல எதிர் கருத்துக்கள் எழுந்த நிலையிலும் இளையராஜா இது போன்ற பேச்சுகளை மாற்றிகொள்ளாமல் இருப்பதாக சில சினிமா பிரபலங்களே கூறுகின்றனர். இவர், அவ்வப்போது
ஏதாவது ஒரு மேடையில் பேசி சர்ச்சைக்குள்ளாவது தொடர்ந்துதான் வருகிறது.
மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்ட ராஜா..
இளையராஜாவின் இந்த குணம், மக்களையும் திரை பிரபலங்களையும் இங்கு முழுமையாக வெறுக்க செய்கிறது. குறிப்பாக மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய விவகாரம். அப்போது இளையராஜா,''இந்த விவகாரத்தில் நான் என்னுடைய கருத்தைத்தான் கூறினேன். நான் எழுதிய கருத்து தவறு என்று மன்னிப்பு கேட்க வேண்டுமா? மற்றவர்கள் எப்படி கருத்து சொல்கிறார்களோ அதே போன்று நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எனக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும், நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த கருத்துதான் இந்திய அளவில் இளையராஜா மீது பெரும் கோபத்தைக் கிளப்பியது. இளையராஜா இது போன்ற பேச்சை பேசி வருவதால் தனது மரியாதையை தானே கெடுத்துகொள்கிறார் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | மாமன்னன் பட விழாவில் உதயநிதியை கலாய்த்த சிவகார்த்திகேயன்..என்ன சொன்னார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ