தமிழ் சினிமாவை தாண்டி இந்தியா சினிமா முழுவதையும் தன் இசையால் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், வைத்து இருப்பவர் இசைஞானி இளையராஜா.  காலத்தால் அழியாத பல பாடல்களை இந்த உலகிற்கு கொடுத்துள்ளார்.  ஜூன் 2ம் தேதியான இன்று தனது 79வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் இளையராஜா.  கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் அனைத்து மொழிகளிலும் இசையமைத்து உள்ளார்.  கேளடி கண்மணி, ஆசை, ரிதம் ஆகிய படங்களின் இயக்குனர் வசந்த் அவர்கள் இளையராஜா பற்றி தன் மனம் திறந்து பேசியுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இளையராஜாவும் இந்தி எதிர்ப்பு போராட்டமும்..


இளையராஜா பிறந்தநாளை ஒட்டி ஜீ நியூஸ் தமிழிற்கு இயக்குனர் வசந்த் அளித்த சிறப்பு பேட்டியில், "அந்த காலத்தில் இளையராஜாவிடம் அப்பாயிட்மென்ட் வாங்குவது மிகவும் கடினம், தினமும் 2 பாடல்களை கம்போஸ் செய்து விடுவார்.  தமிழ், தெலுங்கு, கன்னடா என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய ஆளுமையை கொண்டு இருந்தார் இளையராஜா.  தினமும் அவரை சந்திக்க நீண்ட பேர் வரிசையில் காத்து கொண்டு இருப்பர்.  நான் கேளடி கண்மணி படம் பண்ணும் போது எனக்கு 25 வயது தான். அவரிடம் என் படத்திற்கு இசையமைக்க கால்சீட் கேட்கவே பயமாக இருந்தது.  கங்கை அமரன் தான் அந்த சமயத்தில் இளையராஜாவிற்கு கால்ஷீட் பார்த்து கொண்டிருந்தார்.  அவரின் உதவியில் இளையராஜாவை சந்திக்க நேர்ந்தது.  



இளையராஜா இயக்குனரிடம் தான் பாடல்கள் பற்றி பேசுவார்.  அன்னக்கிளி பெரிய வெற்றி பெற்று பணம் கொட்டியபோதுகூட 78,79ல் அதிகாலை எழுந்து கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள செல்வார். இப்போது யாரால் அப்படி முடியும்.  அவரை சந்தித்த அரை மணி நேரத்தில் என் படத்திற்கு 5 பாடல்களையும் பண்ணி கொடுத்தார்.  இளையராஜாவுடன் ஒவ்வொரு பாடல் ரெகார்டிங்கிலும் புது புது அனுபவம் கிடைக்கும்.  நீ பாதி நான் பாதி பாடல் என் படத்திற்கு கிடைத்தது எனக்கு ஜாக் பார்ட் தான்.  இளையராஜா ஒரு என்சைகுளோபீடியா, அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை, அவர் இசை அமைப்பாளர் இல்லை, இசையை உருவாக்குபவர்.  


செம்மங்குடி சீனிவாசன் இளையராஜாவை மிகவும் பிடிக்கும் என்று கூறி உள்ளார்.  இளையராஜாவை பின்னணி இசை, பாடல்கள் என எதிரிலும் அடித்து கொள்ள முடியாது.  இளையராவிற்கு முன்பும் சரி, பின்னும் சரி அவரை போல் ஒரு இசைமைப்பாளர் யாரும் இல்லை.  மீண்டும் ராஜா சாருடன் பணி ஆற்ற உள்ளேன், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்று இளையராஜாவுடனான தன் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.  


மேலும் படிக்க | எஸ்பிபி-யின் கடைசி இசை ஆல்பம் ’விஸ்ரூப தரிசனம்’ வெளியீடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR