ரஜினிக்கு கூலி படத்திற்கு வேட்டு வைத்த இளையராஜா.. ஷாக்கில் ரசிகர்கள்
ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளாராம்.
ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது, பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் கூலி:
தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், லோகேஷ் கனகராஜ். வெகு சில படங்களே இயக்கியிருந்தாலும் அனைத்தையும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக்கியுள்ளதால், இவருக்கு நடிகர் ரஜினிகாந்தை வைத்து படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் முதல் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இதில், நடிகர் ரஜினிகாந்த் இரு கைகளிலும் கைகடிகாரத்தால் ஆன விலங்கை கட்டியிருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது. மேலும் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமீபத்தில் அந்த படத்தின் அறிமுக வீடியோ ஒன்று வெளியானது. அதில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடலை அனிருத் பயன்படுத்தியிருப்பார்.
இளையராஜா நோட்டீஸால் பரபரப்பு:
இதற்கிடையில் சமீபத்தில் தான் இசையமைத்த பாடல்கள் முழுவதும் தனக்கு தான் சொந்தம் என்றும் தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடைகளில் பாடக்கூடாது என்றும் மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அதற்கு உரிய காப்புரிமையை செலுத்திவிட்டு பயன்படுத்தலாம் என கூறி வரும் இளையராஜா தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்து வெளியான தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான "வா வா பக்கம் வா" என்கிற பாடலை எந்த ஒரு முறையான அனுமதியும் இல்லாமல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தின் அறிமுக வீடியோவுக்கு பயன்படுத்தி இருப்பதாகவும் உரிய அனுமதியை பெற வேண்டும் அல்லது அந்த டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும் என அதிரடியாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸை இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு அனுப்பி இருப்பது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறு செய்யாத பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க தனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷூட்டிங் எப்போது?
இதனிடையே நடிகர் ரஜினிகாந்த், தற்போது வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வருகிறார். கன்னியாகுமரி மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடைப்பெற்றது. இப்படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிந்தவுடன் கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினி காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த படத்தில் போலிஸாக நடிக்கும் இவர், இந்த படத்தில் கடத்தல் மன்னனாக நடிப்பதை பார்த்து, ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ