தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையராஜா. 45 வருடங்களுக்கும் மேலாக 1500 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜாவுக்கு இந்தத் தலைமுறையை சேர்ந்தவர்களும் ரசிகர்களாக இருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீப காலங்களாக இளையராஜா இசை நிகழ்ச்சிகளை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும், அவரது நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பும் இருக்கிறது.



இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார். இந்தக் கச்சேரியில் இதுவரை மேடையில் பாடாத பல பாடல்களை அவர் பாடவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை கங்கை அமரன் உடனிருந்து கவனித்துவருகிறார்.


 



இளையராஜாவின் பிறந்தநாள் ஜூன் 3ஆம் தேதியாக இருந்தாலும், அன்றைய தினம் திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்தநாளும் அன்றைய தினம் வருவதால், இரண்டாம் தேதியே அவர் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வைரலாகும் விஜய்யின் லுக்... இதுதான் கெட்டப்பா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR