வைரலாகும் விஜய்யின் லுக்... இதுதான் கெட்டப்பா?

நடிகர் விஜய்யின் புதிய லுக்கை கண்ட ரசிகர்கள் இதுதான் தளபதி 66 படத்தின் கெட்டப்பா என்று சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 10, 2022, 03:06 PM IST
  • விஜய் 66 அப்டேட்
  • புதிய லுக்கில் தளபதி விஜய்
  • விஜய்யின் புதிய லுக்கை அதிகம் பகிரும் ரசிகர்கள்
வைரலாகும் விஜய்யின் லுக்... இதுதான் கெட்டப்பா? title=

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் அப்படத்தின் இயக்குநர் நெல்சனை ரசிகர்கள் கடுமையாக வறுத்தெடுத்தனர்.

மேலும், விஜய் என்ற ஹீரோவை மட்டும் நம்பி படம் எடுக்காமல் கதை, திரைக்கதையிலும் அவர் கவனம் செலுத்தியிருக்க வேண்டுமென கூறினர்.

Thalapathy

இதற்கிடையே விஜய் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை தெலுங்கு இயக்குநர் வம்சிக்கு கொடுத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

மேலும் படிக்க | இலங்கையில் நீடிக்கும் கலவரம், தொடரும் பதற்றம்: அச்சத்தில் மக்கள்

ஹைதராபாத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது. குடும்ப பின்னணியை மையமாக வைத்து படம் உருவாகவிருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Vijay

இந்நிலையில் தளபதி 66 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரசிகர் ஒருவரிடம் விஜய் வீடியோ கால் பேசும் புகைப்படம் வைரலாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதுதான் தளபதி 66 படத்தில் விஜய்யின் கெட்டப்போ என சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். 

மேலும் படிக்க | அஜித்துடன் மோதுகிறார் சார்பட்டா பரம்பரை வேம்புலி?

அதுமட்டுமின்றி 10 வருடங்களுக்கு முன்பு டொகோமோ விளம்பரத்தில் நடித்த கெட்டப் போலவே இதுவும் இருக்கிறது எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News