நலமாக உள்ளேன், பிரார்த்தனைக்கு நன்றி: திலீப் குமார் தகவல்
பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் கடந்த 6-ம் தேதி காலில் வீக்கம் ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
புதுடெல்லி: பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் கடந்த 6-ம் தேதி காலில் வீக்கம் ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள லிலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து டிவிட்டரில் திலீப் குமார் தெரிவித்ததாவது: இப்போது ஓரளவு பரவாயில்லை. லீலாவதி மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்குச் சென்றேன். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். உங்கள் பிரார்த்தனையில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்றார்.
மேலும் அவரது மனைவி சாய்ரா பானு கூறுகையில்: அவரது உடல் தற்போது நன்றாக உள்ளது, முழு உடல் பரிசோதனை செய்த பின்னர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறினார்.