தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் படங்களில் ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி இவரது தயாரிப்பில் அடுத்ததாக வாழ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தயாரிப்பில் வெளியாக இருக்கும் வாழ் (Vaazhl) படத்தினை அருவி பட இயக்குனர் அருள் புருஷோத்தமன் இயக்கியுள்ளார். இந்த படத்தை கடந்த ஆண்டே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.


ALSO READ | டாக்டர் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்; படக்குழு முக்கிய முடிவு


இந்நிலையில், இப்படம் வருகிற ஜூலை 16 ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


முன்னதாக சிவகார்த்திகேயன் 2 படங்களை தயாரித்துள்ளார். அதில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரியோ நடிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட், தயாரிப்பாளர் அறிக்கை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR