சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட், தயாரிப்பாளர் அறிக்கை!

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

Written by - ZEE Bureau | Last Updated : May 12, 2021, 03:57 PM IST
சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட், தயாரிப்பாளர் அறிக்கை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) இப்படத்தை ரம்ஜான் பண்டியன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது டாக்டர் (Doctor) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக போவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. 

ALSO READ | கவின் நடித்துள்ள லிப்ட் படத்தில் சிவகார்த்திகேயன்! வெளியான முக்கிய வீடியோ!

இந்த நிலையில் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் அதில்., ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றனர். இந்த படத்தை சரியான தேதியில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டுதான் வருகின்றேன். அதே நேரத்தில் நமது திரையுலக சொந்தங்கள் கொரோனாவால் (Coronavirus) உயிர் இழந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து சிந்திக்க என்னால் முடியவில்லை. 

 

 

முழு படமும் முடித்து கையில் ரெடியாக உள்ள நிலையில், கொரோனா காரணமாக அதை வெளியிட முடியாமல், பல பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளோம். படம் நல்லபடி ரிலீஸ் ஆக எனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். முதலில் நமது நாடு கொரோனாவில் இருந்து மீளட்டும், அதன் பிறகு ‘டாக்டர்’ ரிலீஸ் குறித்து யோசிக்கலாம். அதுவரை தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக குடும்பத்துடன் வீட்டிலேயே இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News