2015ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி படம் வெளியானது.  இப்படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய ஹிட் அடித்தது.   மேலும் மாரி படத்தில் தனுஷின் கெட்டப் அனைவராலும் ரசிக்கப்பட்டது.  புதுவித ஹர்ஸ்டைல், தாடி மற்றும் கலர் சட்டையுடன் தனுஷின் புகைப்படங்கள் வைரல் ஆனது.  அந்த சமயத்தில் அனைத்து கல்லூரிகளிலும் விழாக்களில் மாணவர்கள் தனுசை போன்று கெட்டப் போட்டுக்கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மாரி திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ஒரு வெற்றிகரமான படமாக அமைந்தது.  இந்த படத்தில் இடம்பெற்ற காமெடிகளும், அனிருத் இசையில் வெளியான அனைத்து பாட்டுகளும் மிகப்பெரிய ஹிட் அடித்தன. இந்த படத்தில் தனுஷிற்கு கொடுக்கப்பட்டுள்ள பில்டப் காட்சிகள் அனைத்தும் மாசாக அமைந்தது.


மாரி திரைப்படம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் கழித்து மாரி 2 திரைப்படம் வெளியானது.  இந்தப் படத்தில் சாய்பல்லவி, டொவிநோ தாமஸ், கிருஷ்ணா போன்றோர் நடித்தனர்.  மாரி படம் முடிந்த இடத்திலிருந்து மாரி-2 தொடங்கியது.  ஆனால் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடத்தில் சென்று அடையவில்லை.  இது ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது.  மாரி 2 வில் அனிருத்திற்கு பதிலாக வேறு இசையமைப்பாளரை வைத்ததும் இப்படத்தின் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. 


இருப்பினும் மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் யூடியூபில் மிகப்பெரிய ஹிட்டடித்தது.  தனுஷ் மற்றும் தீ யின் குரலில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த இப்பாடல் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களால் ரசிக்கப்பட்டது.  தற்போது வரை இந்த பாடல் யூ டியூபில் 1.2 பில்லியன் மக்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.  இந்தப் பாட்டின் மூலம் மட்டுமே தயாரிப்பாளர் தனுஷ்க்கு 33 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.  கிட்டத்தட்ட மாரி 2 படத்தின் தயாரிப்பு செலவு இந்த ஒரு பாடலின் மூலம் தனுஷிற்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.


 



ALSO READ இந்திய திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR