Kamal Haasan Indian 2 Official Release Date : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் 2 திரைப்படம்:
கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்தியன் 2 (Indian 2) திரைப்படம். முதல் பாகத்தில் அதில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனமும் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் உலக நாயகம் கமல்ஹாசனுடன் எஸ்ஜே சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், மறைந்த விவேக், மறைந்த மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த படத்தின் பின்னணி பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.


மேலும் படிக்க | எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள கல்கி 2898 கிபி படம்! வெளியான மாஸ் அப்டேட்!


இந்தியன் 2 ரிலீஸ் தேதி அப்டேட்:
இந்நிலையில் தற்போது சமீபத்தில் சேனாபதியின் செம லுக் வெளியானதுடன் படத்தை ஜூன் மாதம் வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது படத்தில் பாடல் காட்சிகள் இன்னும் படமாக்கப்பட இருப்பதாலும் வேறு சில காரணங்களாலும் இந்த படம் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகயுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் அனிருத் இசையில் முதல் சிங்கிள் வரும் மே 22ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.160 கோடிக்கு வாங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.



பலரை காவு வாங்கிய இந்தியன் 2 படம்:
இந்தியன் 2 படத்தை ஆரம்பித்ததில் இருந்து பிரச்சனைகளுக்கு மேல் பிரச்ச்னை கிளம்பியது. முதலில் படத்தின் கதையினால் கமல் ஹாசனுக்கும் (Kamal Haasan) ஷங்கருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த காரணத்தால் படப்பிடிப்பில் சில காலம் தாமதம் ஏற்பட்டதை அடுத்து, படத்தின் தயாரிப்பிலும் சர்ச்சைகள் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி, இந்த படத்தில் நடித்த நடிகர்களும் இறந்து போயினர்.


இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்:
இதனிடையே இந்தியன் 2 திரைப்படம் வெளியானதற்கு 6 மாதங்கள் கழித்து இந்தியன் 3 திரைப்படம் வெளியாகும் என சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Sivakarthikeyan New Movie : சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ