எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள கல்கி 2898 கிபி படம்! வெளியான மாஸ் அப்டேட்!

கல்கி 2898 கிபி படத்தின் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துவிட்டது.  5வது சூப்பர் ஸ்டார் & பைரவாவின் நம்பகமான நண்பரான புஜ்ஜி 22 மே 2024 ல் அறிமுகமாகிறார் !!  

Written by - RK Spark | Last Updated : May 19, 2024, 06:23 PM IST
  • எதிர்பார்ப்பில் உச்சத்தில் இருக்கும் கல்கி படம்.
  • ஜூன் 27, 2024 திரையரங்குகளில் வெளியாகிறது.
  • பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள கல்கி 2898 கிபி படம்! வெளியான மாஸ் அப்டேட்! title=

கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரான புஜ்ஜியின் அறிமுகம் மே 22, 2024 அன்று வெளியாகவுள்ளது.  இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 'From Skratch EP4: Building A Superstar' என்ற தலைப்பிலான கண்கவர் திரைக்குப் பின்னால் நம்மை ஒரு அசாத்தியமான காட்சி அனுபவத்திற்குள்  கூட்டிச் செல்கிறார் இயக்குனர் நாக் அஷ்வின்.  2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. "சூப்பர் ஹீரோ", "பைரவாவின் சிறந்த நண்பன், " புஜ்ஜி" என பில்ட் அப்கள், நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வத்தைத் தூண்டுகிறது. 

மேலும் படிக்க | கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக் தீபாவின் கல்யாண கொண்டாட்டத்தில் ரம்யா.. உண்மை உடையும் நேரத்தில் வந்த ட்விஸ்ட்

இது குறித்தான வீடியோ லிங்க்

2 நிமிட 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில்,  பிரபாஸுடனான  சந்திப்பு  காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கிறது. சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில்  அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமாவின் தோற்றம்,  ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை ஒருங்கிணைத்து உண்மையான பான்-இந்திய டீஸராகக் அசத்தலால வெளியாகியுள்ளது இந்த டீசர். 

அற்புதமான படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற  இந்தியளவிலான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில், வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கல்கி 2898 AD இந்த ஆண்டின்  மிக முக்கிய படைப்பாக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.  இப்படம்  ஜூன் 27, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் படிக்க | சித்தார்த்தின் 40வது படத்தை இயக்கப்போவது யார்? வெளியான மாஸ் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News