இந்தியாவில் இவளோ பேர் OTT தளங்களை பயன்படுத்துகிறார்களா?
கொரோனா தொற்று காலத்தில் OTT தளங்களின் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது புதிய படங்கள் பற்றிய அறிவிப்பு வந்தால் எந்த OTTயில் வெளியாகிறது என்று பார்க்கத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு தற்போது OTT தளங்கள் பல புதிய படங்களை வெளியிட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக OTT தளங்களின் பயன்பாடு மக்களிடத்தில் அதிகமாகி உள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் பெற நினைத்த புதிய பயனர்களை கடந்த ஆறு மாதங்களிலேயே எட்டி அசுர வளர்ச்சி அடைந்துள்ளனர் OTT நிறுவனங்கள்.
தற்போது Netflix , Amazon Prime Video , Apple TV+, Hotstar, Sony liv போன்ற பல OTT தளங்கள் மக்களிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. 2008-ம் ஆண்டு ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் OTT இயங்குதளம் BigFlix ஆகும். அதன் பின், 2013-ம் ஆண்டில் சோனிலிவ் மற்றும் டிட்டோ டிவி (ஜீ) அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமடைய தொடங்கியது. இந்நிலையில், இந்தியாவில் 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட Disney Hotstar, குறிப்பிட்ட காலத்தில் மிகவும் பிரபலமான தளமாக உருவெடுத்தது. கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து ஒளிபரப்பியது இதன் பயனர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த உதவியது. பின்னர் 2016 -ம் ஆண்டு Netflix, இந்தியாவில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது.
ஒடிடி தளங்களில் அதிக பயனர்களை கொண்ட தளங்களில் 2.5 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று Disney Hotstar முதலிடத்தில் உள்ளது. Amazon Prime 1.7 கோடியே சப்ஸ்கிரைபர்களை கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. 70 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டு Sony Liv நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகளவில் மிகப்பெரிய நிறுவனமான Netflix இந்தியாவில் 46 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டு 4-வது இடத்தில் உள்ளது. Netflix-ஐ அடுத்து Zee5 40 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது. சமீபத்தில் OTT தளங்கள் அனைத்தும் தங்களது வருடாந்திர சந்தா தொகையை உயர்த்தி உள்ளனர். மேலும் அமேசான் நிறுவனம் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற விண்ணப்பித்துள்ளது.
ALSO READ அடுத்தடுத்து OTT-யில் வெளியாகும் மோகன்லாலின் 4 படங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR