'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் 'இந்திரஜித்'. இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'உதயம் NH4' படத்தில் நடித்த அஷ்ரிதா ஷெட்டி கதாநாயகியாக மீண்டும் தமிழில் களமிரங்குகிறார். தாணுவின் 'வி கிரியேசன்ஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 


'சக்கரகட்டி' படத்தை இயக்கிய கலாபிரபு இப்படத்தை இயக்குகிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத்திடம் உதவி இசையமைப்பாளராக இருந்த கிருஷ்ண பிரசாத் முதன்முறையாக இசையமைத்துள்ளார். 



வரும் நவம்பர் 24-ம் தேதி இப்படம் திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.