என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் - ரஞ்சித் பரபரப்பு புகார்!
தன்னுடைய திரைப்படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு மிரட்டல் வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஞ்சித் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இன்று திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது எனவும், சில காரணங்களால் படத்தை ஒத்திவைப்பதாகவும் இது தொடர்பாக முதல்வரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன் என கவுண்டம்பாளையம் படத்தின் இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் தெரிவித்துள்ளார். கவுண்டம்பாளையம் எனும் படத்தின் எதிர்ப்பு மற்றும் மிரட்டல் தொடர்பாக நடிகர் ரஞ்சித் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று திரைக்கு வர இருந்த தான் நடித்த கவுண்டம்பாளையம் படம் திரையிடபடாது எனவும், ஒத்திவைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ‘பாரதி கண்ணம்மா’ தொடர் நடிகைக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
இது தொடர்பாக முதல்வரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன் என தெரிவித்தார். இந்த படம் வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருப்பதாகவும், தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தார். நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருவதகாவும் அவர் தெரிவித்தார். மேலும் ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்பவர்களுக்கு நான் சொல்லும் பதில் எனவும் தெரிவித்த ரஞ்சித், சென்சர் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
ஆனால் யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்லவிரும்பவில்லை என தெரிவித்த அவர், தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன் எனவும், இனி நான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவையும் கடவுள் பார்த்துகொள்வார் என தெரிவித்தார். நான் நேர்மையாகவும், உண்மையாகவும் படம் எடுத்துள்ளேன். நான் பொய் சொல்லவில்லை. இந்த படத்தை திரையிட்டால் கலட்டா செய்வோம் என்று பலர் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம் எனவும் ஒரு நாடக காதலை பற்றியும், ஒரு நல்ல குடும்ப கதையை நான் எடுத்துள்ளேன். ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளரவிடாமல் தடுக்கிறார்கள். இந்த படம் இன்று வெளியிடப்படாது என்பதை வருத்தோடு தெரிவித்து கொள்வதாகவும் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | அடேங்கப்பா…ஸ்ரீதேவியின் மகளுக்கு இத்தனை கோடி சொத்துகள் இருக்கா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ