சென்னை: இளைய தளபதி விஜயின் அடுத்த திரைப்படம் தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் 66வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணும் கண்ணும் கொல்லை அடிதால் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி.  துல்கர் சல்மானின் 25வது படமான இது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.  விஜய் டிவி புகழ் ரக்சன், ரீத்து வர்மா, கௌதம் வாசுதேவ் மேனன், நிரஞ்சனி போன்றோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  


இத்திரைப்படம் வெளிவந்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் பெரியசாமி தனது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிடாமல் இருந்து வருகிறார்.  சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நிரஞ்சனிக்கும் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.  


இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளிவந்த சிறிது நாட்களிலேயே நடிகர் சிவகார்த்திகேயன் தேசிங்கு பெரியசாமி இடம் கதை கேட்டு ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதன்பின் அந்தப் படத்தை பற்றின எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. 


Also Read | Ennanga Sir Unga Sattam: என்னங்க சார் உங்க சட்டம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு


அதற்குப்பின் நடிகர் ரஜினியிடம் கதைசொல்லி ஓகே செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் முழுவதும் செய்தி பரவலாக இருந்தது.  அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார் என்றும் லைகா அல்லது ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  


தற்போது நடிகர் விஜய்யிடம் கதை சொல்லி ஓகே செய்திருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. அட்லி, லோகேஷ் கனகராஜ் என்று தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் விஜய் நடித்துக் கொண்டிருப்பதால் தேசிங்கு பெரியசாமி படம் நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  ஆனால் இது விஜயின் 67வது படமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், ஏற்கனவே விஜயின் 66வது படத்திற்கு தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல்கள் வெளியானது.  


தற்போது விஜய்யின் 65 வது படமான பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது.  


Also Read | Beast Update: பீஸ்ட் படத்தில் தனுஷ்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR