சென்னை: தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கபடும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நானும் ரௌடி தான் படத்தில் தொடங்கிய அவர்களின் நட்பு பின்பு காதலாக மாறி, அது கனிந்து தற்போது திருமணத்தில் வந்து முடிந்தது. திருமணத்தையே திருப்பதியில் நடத்த விரும்பினார்கள். ஆனால் திருப்பதியில் இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக திருமணம் வேறு இடத்தில் நடைபெற்றது.


திருமணமான அடுத்தநாளே விக்னேஷ்சிவன் - நயன்தாரா புதுமணத்தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானிடம் ஆசி பெற சென்றனர். அங்கு தரிசனத்திற்கு சென்ற அவர்கள் இருவர் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு செய்யும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.


மேலும் படிக்க | நயன் - விக்னேஷ் சிவனுக்கு தாலி எடுத்துக்கொடுத்தாரா ரஜினிகாந்த்?


திருப்பதி பிரமோற்சவ விழா நடைபெறும் மாடவீதியில் செருப்பு அணிந்து செல்ல கூடாது என அறிவிப்பு பலகை இருந்தும் நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி மற்றும் அவர்களின் புகைப்பட குழுவினர் செருப்பு அணிந்து கொண்டு மாடவீதிகளில் போட்டோ ஷூட் நடத்தினார்கள்.



இது ஆந்திர மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் செருப்பு அணிந்து கொண்டு புனித தளத்தில் வலம் வந்ததற்கு ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சி உட்பட பல்வேறு அமைப்புக்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.


நடிகை நயன்தாரா மீது நடவடிக்கை எடுக்க முடிவு
திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது, நயன்தாரா விக்னேஷ்சிவன் ஜோடி காலணிகள் அணிந்து வந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்தார்.


மேலும் படிக்க | நயன்தாரா - விக்னேஷ் சிவன் வயது வித்தியாசம் எவ்வளவு? அதிகம் தேடிய நெட்டிசன்கள்


இது குறித்து பேசிய தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி, ஏழுமலையான் கோயில் முன் உள்ள பகுதி, 4 மாடவீதிகள், லட்டு கவுண்டர், கோயில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது,


அந்தப் பகுதியில் பெரிய அளவில் போட்டோஷூட் நடத்த தேவஸ்தானத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.



இதற்கு முன் இதுபோல் யாரும் ஏழுமலையான் கோயில் முன் போட்டோஷூட் நடத்தியது கிடையாது என்று கூறிய அவர், எனவே இது பற்றி நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தம்பதிகளிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


அதோடு இதுதொடர்பாக அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தேவஸ்தான கூறினார்.


சில அமைப்புகள் நயன்தாரா ஜோடி மீது வழக்கு பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..திருமணமான அடுத்தநாளே விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | கொரோனா பாதித்த ஷாருக்கான் நயன்தாரா மேரேஜில் கலந்துகொண்டது எப்படி?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR