தனது அண்ணாத்த படத்தையடுத்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனிருத் இசையமைக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து கோலிவுட்டே நெல்சனை ஆச்சர்யத்துடன் பார்த்தது. மூன்றே படங்களில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணிப் பலரும் வாழ்த்து மழை பொழிந்தனர். 


ஆனால் இதெல்லாம் பீஸ்ட் படம் வெளிவரும் வரைக்கும்தான். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம், வசூல் குவித்தாலும், பரவலாக எதிர்மறை விமர்சனங்களையே சந்தித்தது. 


ஹிட் கொடுக்கவேண்டிய நிர்பந்த நிலையில் நெல்சனுடன் ரஜினி இணைய வந்த நிலையில், பீஸ்ட் படத்துக்கு இப்படியான ஒரு நிலை ஏற்பட்டதால், ரஜினி- நெல்சன் காம்போ படம், சொன்னபடி நடக்குமா என திரை வட்டாரத்தினர் சந்தேகிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.



ஆனால் இவற்றையெல்லாம் தவிடுபொடி ஆக்கும் விதமாக இப்படத்தின் டைட்டில் போஸ்டரை சில தினங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது. நெல்சனுடன் ரஜினி கூட்டணி அமைக்கவுள்ளதும் இப்படத்தை நெல்சனே எழுதி இயக்கவுள்ளதும் அதன் மூலம் உறுதி செய்யப்பட்டது. 


ஜெயிலர் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஆகஸ்ட்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்துவருகின்றனர்.


மேலும் படிக்க | நடிகர் விஜய்- தோனி காம்போவில் அடுத்த படம்? -மிரளும் கோலிவுட்!



இப்படத்துக்காகத் தனியாக போட்டோஷூட் ஏதும் நடத்தாமல் ஏற்கெனவே இணையத்தில் உள்ள ஒரு புகைப்படத்தை அப்படியே எடுத்துவந்து, அதில் ரத்தம் தோய்ந்த கத்தியைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுள்ளதாகவும் கூறிவருகின்றனர்.


மேலும் படிக்க | கமலுக்குக் கோவில்.. ஆண்டவரை நிஜமாகவே ஆண்டவர் ஆக்கிய ரசிகர்கள்! - அதுவும் எந்த ஊர்ல தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR