லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் உள்ளிட்ட நட்சத்திர கூட்டங்களுடன் உருவாகி வரும் 'லியோ' படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.  இந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  தற்போது 'லியோ' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது, சமீபத்தில் தான் இயக்குனர் மிஷ்கின் படத்தில் தனக்கான காட்சிகளின் ஒரு பகுதியை நடித்து முடித்துள்ளார்.  'லியோ' படப்பிடிப்பு தளத்தில் கெளதம் மேனன் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் சில இணையத்தை வட்டமடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தது.  இப்படி நாளுக்கு நாள் விஜய் நடிக்கும் 'லியோ' படம் பற்றிய செய்திகள் வெளியாகி ரசிகர்களை ஜாலி மோடில் வைத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 'நல்ல செய்தி வந்தால் சொல்கிறோம்' - திருமணத்தை முற்றிலும் மறுத்த சிம்பு தரப்பு


'லியோ' படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிகை திரிஷா திரையை பகிர்ந்துகொள்வதை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.  சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்று கொண்ட இலங்கையை சேர்ந்த ஜனனி 'லியோ' படத்தில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.  பிக்பாஸ் மூலம் பிரபலமான பலருக்கும் சினிமா வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது ஜனனிக்கு மிகப்பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  'லியோ' படத்தில் விஜய்க்கு மகளாக ஜனனி நடிப்பதாக சில தகவல்கள் வெளியானது, இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் ஜனனியிடம் கேட்கப்பட்டது.  'லியோ' படத்தில் விஜய் உங்களுக்கு அப்பாவா என்று கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதிலளித்தவர் இதைப்பற்றி வெளியிட எனக்கு அனுமதி இல்லை என்று தந்திரமாக மறுத்துவிட்டார்.



விஜய்யின் மகளாக ஜனனி நடிக்கப்போகிறாரா என்று ரசிர்கர்கள் யோசித்து வரும் நிலையில், 'லியோ' பட பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நடிகர் அர்ஜுனனின் ஏழு வயது மகள் இயல் விஜய் மற்றும் த்ரிஷாவுடன் காணப்பட்டார்.  இதனால் விஜய் இப்போது 7 வயது குழந்தைக்கு அப்பாவாக நடிக்கிறாரா? அல்லது 24 வயது பெண்ணுக்கு அப்பாவாக நடிக்கிறாரா? என்று குழப்பம் எழுந்துள்ளது.  இதற்கான தெளிவான விடை அக்டோபர் 19ம் தேதி தான் தெரியவரும், ஏனெனில் அன்றைய தினம் தான் உலகம் முழுவதும் படம் பிரம்மாண்டமாக வெளியாகிறது.


மேலும் படிக்க | சூர்யாவுடன் இணையப்போகும் பிரபல மலையாள நடிகர்! வைரலாகும் புகைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ