Rashmika Mandanna: படுகவர்ச்சியாக வந்த 'ஜிமிக்கி பொண்ணு' -ராஷ்மிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Rashmika Mandanna Trolled: சமீபத்தில் நடந்த Zee Cine Awards விருது விழாவில், நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த கருப்பு நிற உடையை கலாய்த்து நெட்டிசன்ஸ் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 27, 2023, 05:33 PM IST
  • சிறந்த அறிமுக நடிகை (இந்தி) விருதை அவர் வாங்கினார்.
  • அந்த நிகழ்வில் அவர் நடனமும் ஆடினார்.
  • விழா குறித்து ராஷ்மிகாவும் பதிவிட்டுள்ளார்.
Rashmika Mandanna: படுகவர்ச்சியாக வந்த 'ஜிமிக்கி பொண்ணு' -ராஷ்மிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் title=

Rashmika Mandanna Trolled: கன்னடத்தில் அறிமுகமாகி, தெலுங்கில்  பிரபலமாகி தற்போது, தமிழ், இந்தி என திரைத்துறையினர் முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும், பெரும் பட்ஜெட்டில் உருவாகும் படங்களிலும் தவராமல் இடம்பிடித்துவிடுகிறார், ராஷ்மிகா மந்தனா. படங்களில் மட்டுமின்றி பொதுவெளியிலும் இவரின் குழந்தைத்தனமான க்யூட் எக்ஸ்பிரஷன்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 

'ஓ... சாமி...'

அதுமட்டுமின்றி, ட்விட்டரில் இவரை 'National Crush' நெட்டிசன்கள் கொண்டாடி தீர்த்து வந்தனர். இவர், 2016ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டியின் கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, கன்னடத்தில் நடித்து வந்த அவர், தெலுங்கிலும் நடிக்க தொடங்கினார். குறிப்பாக, விஜய் தேவரகொண்டா உடன் தெலுங்கில் நடித்த கீதா கோவிந்தம் படம், இவருக்கு பெரும் பெயரை வாங்கிக்கொடுத்தது. பின்னர் பல படங்களில் நடித்தாலும், 2021ஆம் ஆண்டில் வெளிவந்த 'புஷ்பா' படம் பாலிவுட் லெவலில் அவரை வைரலாக்கியது. 

குறிப்பாக, 'ஓ... சாமி' உலகம் முழுவதும் ஹிட் அடிக்க, அதில் ராஷ்மிகாவின் பெர்பாமன்ஸும் அவருக்கு இந்தியில் வாய்ப்புகளை தேடி தந்தது. மேலும், 2021இல் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். சமீபத்தில், தமிழ், தெலுங்கில் வெளியான விஜய்யின் வாரிசு படத்திலும் ராஷ்மிகா கொண்டாடப்பட்டார். தொடர்ந்து, இந்தியில் அவர் நடித்த மிஷன் மஞ்சு கடந்த மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றது. வேதனையின் உச்சத்தில் ராஷ்மிகா மந்தனா! சினிமாவை விட்டு விலகப்போகிறாரா?

மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தில் கமலுக்கு இத்தனை வில்லன்களா? யார் யார் தெரியுமா?

உச்சத்தில் ராஷ்மிகா

தற்போது, ராஷ்மிகாவின் கிராஃப் உச்சத்தில் இருந்துவரும் நிலையில், அவரை பல விருது விழாக்களிலும், கலை விழாக்களிலும் காண முடிகிறது. பட விழாக்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் ராஷ்மிகா எப்போதும் இணையத்தில் பேசு பொருளாகவே இருப்பார். அவருக்கு ரசிகர்கள் இருக்கும் அதே வேளையில், அவரை கலாய்ப்பவர்கள் இணையத்தில் அதிகமானோர் உள்ளனர். ராஷ்மிகா ரசிகர்கள் ரசிக்கும் அத்தனை விஷயங்களையும் எதிர்க்கும் வகையில் ஒரு தரப்பு இணையத்தில் உள்ளது.  

பாலிவுட் ராஷ்மிகா?

அந்த வகையில், சமீபத்தில் நடந்த Zee Cine Awards என்ற விருது விழாவிலும் ராஷ்மிகா கலந்துகொண்டார். அதில், ஸ்டைலான கருப்பு  மினி உடையில் வந்திருந்தார். பலரும் அதை பார்த்து வியந்துகொண்டிருந்த நிலையில், இணையத்தில் அந்த உடையை கலாய்த்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "இவர் பாலிவுட்டில் நடிக்க தொடங்கியதில் இருந்து உர்ஃபி ஜாவத் போன்றே உடையணிந்து வருகிறார்" என பதிவிட்டுள்ளார். பாலிவுட் மாடலான உர்ஃபி ஜாவத், வினோதமான உடைகளை அணிந்து இணையத்தில் புகைப்படங்களை வெளியிடவதை வாடிக்கையாக கொண்டவர். 

மற்றொரு பதிவர்,"இவர் பாலிவுட்டுக்கு அடிமையாகிவிட்டார்" என குறிப்பிட்டுள்ளார். "இவருக்கும் பாலிவுட்டுக்கு வந்தபின் இப்படி உடையணிய வேண்டும் என்று ஆசை இருந்துள்ளதுபோல" என குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், ராஷ்மிகா பேஷனில் அதிக கவனம் செலுத்துபவர் என்பதால், இந்த கருத்துகளை பெரிதும் பொருட்படுத்த வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. கடந்தாண்டு ராஷ்மிகா பாலிவுட்டில் அறிமுகமாகியிருந்தார். அமிதாப் பச்சனின் 'குட்பாய்' படத்தில் நடித்திருந்தார்.

மேலும், அவருக்கு Zee Cine Awards விழாவில், சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. மேலும், இந்த விழாவில் விருது வாங்கியது குறித்தும், விழாவில் நடனம் ஆடியது குறித்தும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே கருப்பு மினி உடையில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 'நல்ல செய்தி வந்தால் சொல்கிறோம்' - திருமணத்தை முற்றிலும் மறுத்த சிம்பு தரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News