குடிப்பழக்கம் to காவ்யா மாறன்- ஜெயிலர் பட விழாவில் ரஜினி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்..!
Jailer Audio Launch Rajinikanth Speech: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் ரஜினி பகிர்ந்த சில சுவாரஸ்யமான தகவல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக நடித்துள்ள படம், ஜெயிலர். இந்த படத்தில் தமன்னா நாயகியாக வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் கைக்கோர்த்துள்ளார், ரம்யா கிருஷ்ணன். இவர்கள் மட்டுமன்றி, மலையாள நடிகர் மோகன்லால் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோரும் படத்தின் கேமியோ கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சூப்பர் ஸ்டார் பட்டம்..
“சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..சின்ன குழந்தையும் சொல்லும்..:” என்ற பாடலில் இருந்து ஆரம்பித்தது இந்த சூப்பர் ஸ்டாரின் பயனம். தமிழ் ரசிகர்களால் அன்புடன் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினி, தனக்கு கிடைத்த இந்த பட்டம் குறித்து நேற்றைய ஜெயிலர் பட விழாவில் பேசினார். அப்போது “இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் இருந்தாலே பிரச்சனைதான்..” என அங்கலாய்த்து கொண்டார் ரஜினி.
குடிப்பழக்கம்:
நடிகர் ரஜினி என்றவுடன் அவர் நடித்த படங்கள் சிலருக்கு ஞாபகம் வரும். ஒரு சிலருக்கு ரஜினியின் தனிப்பட்ட வாழ்வில் அவர் செய்யும் செயல்கள்தான் நினைவிற்கு வரும். தற்போது ஆன்மீகம், இமையமலை பயணம், சுய ஒழுக்கம் என்றிருக்கும் ரஜினி தன் இளமை காலத்தில் மொத்தமாக வேறு மனிதராக இருந்தார். இவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமும் குடிப்பழக்கமும் இருந்தது என்பது அனைவரும் அறிந்த கதை. இது குறித்து ரஜினியும் பல மேடை விழாக்களில் பேசியுள்ளார். ரஜினி நேற்றைய விழாவில் தன்னிடம் இருந்து குடிப்ப்பழக்கம் குறித்தும் பேசினார். தான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறே குடித்ததுதான் என்று அவர் கூறினார். அப்போது, “தயவு செய்து யாரும் குடிக்காதீங்க..நீங்கள் ஒருவர் குடிப்பதால் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் பாதிக்கப்படுவார்கள்..” என்று தன் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார்.
மேலும் படிக்க | நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக்..! ஷாக்கில் ரசிகர்கள்..!
காவ்யா மாறனை கலாய்த்த ரஜினி..!
ஜெயிலர் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் நேற்றைய விழாவிற்கு வந்திருந்தார். அப்போது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்குமே ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று மேடையில் ரஜினியை புகழ்ந்து பேசினார். தான் பேசுகையில் வெற்றி மாறனின் புகழ்ச்சிக்கு ரஜினி நன்றி தெரிவித்தார். கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன், ‘சன்ரைசஸ் ஐதராபாத்’ அணியின் உரிமையாளராக உள்ளார். இது குறித்தும் ரஜினி நேற்று பேசினார். அப்போது அவர், “தயவு செய்து நல்ல அணியனிரை உங்கள் அணிக்கு தேர்வு செய்யுங்கள். காவ்யா மாறன் அப்செட்டாக இருப்பதை டிவியில் பார்க்க கஷ்டமாக உள்ளது..” என்று கூறினார். இது பலருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
‘பீஸ்ட்’ படம் குறித்து ரஜினி..
நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்திற்கு முன்பு இயக்கியிருந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே விமர்சனத்தில் தாறுமாறாக அடி வாங்கியது. ஆனால் அந்த சமயத்தில் ஜெயிலர் படத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதை இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி நினைவு கூர்ந்தார். அப்போது, “கதைக்கு ஓகே சொல்லும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து கொள்ளுங்கள் என என்னிடம் பலர் கூறினர். பீஸ்ட் படத்திற்கும் நெகடிவ் விமர்சங்கள் வந்து கொண்டிருந்தது. இதுக்குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்ட போது படம் பாக்ஸ் நல்ல வசூலையே பெற்றுள்ளதாக தெரிவித்தனர்...” என்று கூறினார். நெல்சன் எந்த இடத்திலும் ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் அதை விட்டுக்கொடுக்கவில்லை என்றும் இப்படத்திற்காக கடினமாக அவர் உழைத்துள்ளதாகவும் ரஜினி தெரிவித்தார்.
ரஜினி சொன்ன பழமொழி..!
ரஜினி, நேற்று தனக்கு கிடைக்கும் நெகடிவ் கமெண்டுகள் குறித்து பேசினார். அப்போது, “குரைக்காத நாயும் இல்ல..குறை சொல்லாத வாயுமில்ல..இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்ல..” என்று கூறினார். இதை, அவர் தன்னை குறித்து ட்ரோல் செய்பவர்களுக்காக கூறியதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | Leo Update: யார் இந்த ஆண்டனி தாஸ்..? வெளியானது க்ளிம்ஸ் வீடியோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ