நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக்..! ஷாக்கில் ரசிகர்கள்..!

Prabhas Facebook Account Hacked: தெலுங்கு பட நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Jul 29, 2023, 02:53 PM IST
  • பாகுபலி படம் மூலம் பிரபலமானவர் பிரபாஸ்.
  • சலார்-கல்கி 2898 ஏடி படத்தில் நடித்து வருகிறார்.
  • இவரது ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக்..! ஷாக்கில் ரசிகர்கள்..! title=

‘பாகுபலி’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை அவரே தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பான் இந்தியா நடிகர் பிரபாஸ்..

திரையுலகில் சுமார் 21 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் ‘பாகுபலி’ படம் மூலம் உலகறியும் நடிகராக மாறியவர், பிரபாஸ். தெலுங்கு கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த இவருக்கு, ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படம் பெரிய ட்விஸ்டாக அமைந்தது. இந்த படத்தை அடுத்து நடிகர் பிரபாஸ் பான் இந்தியா படங்களில் மட்டுமே கமிட் ஆகி வருகிறார். ராதே ஷ்யாம், சஹோ, ஆதி புருஷ் என பல மாெழிகளில் பல கோடி செலவு செய்து உருவான படங்களில் மட்டுமே இவர் சமீப காலமாக நடித்து வருகிறார். பிரபாஸிற்கு தமிழ் ரசிகர்களும் பல பேர் உள்ளனர். இவரது முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

பேஸ்புக் பக்கம் ஹேக்..!

சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருந்தாலும் பெரும்பாலும் அதன் பக்கமே போகாமல் இருக்கும் பிரபலங்களுள் ஒருவர் பிரபாஸ். தன் படத்தின் ரிலீஸ் சமயங்களில் அவற்றின் ப்ரமோஷனிற்காக மட்டுமே இவர் இன்ஸ்டா-பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தலைக்காட்டுவார். இந்த நிலையில், பிரபாஸின் பேஸ்புக் பக்கம் முடங்கியுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரபாஸ், “என் பேஸ்புக் பக்கம் முடங்கியுள்ளது. இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு வருகிறது” என ஸ்டோரி பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | புர்கா அணிந்து பொது வெளியில் சுற்றிய பிரபல நடிகை..!

குழப்பத்தில் ரசிகர்கள்..!

பிரபாஸ் நேரில் எதுவும் பேசாமல் அமைதி காக்கும் பிள்ளையாக இருப்பது போலத்தான் சமூக வலைதளங்களிலும் சைலண்டாக இருப்பார். தன்னுடன் பணிபுரிவர்களுக்கு பிறந்தநாள் போஸ்ட் போடுவது, தன் படங்களின் ப்ரமோஷன்களுக்கான பதிவுகளை வெளியிடுவது போன்ற செயல்கள் மட்டுமே இவரது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும். இந்த நிலையில், இவரது சமூக வலைதளப்பக்கத்தை பாேய் எதற்கு முடக்கினார்கள் என ரசிக்கர்கள் குழம்பி வருகின்றனர்.  

கல்கி-ஏடி 2898:

இந்திய திரையுலகினராலும் சினிமா ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம், கல்கி ஏடி 2898. ப்ராஜெக்ட் கே என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த படத்திற்கு சமீபத்தில்தான் டைட்டில் வைக்கப்பட்டது. சையின்ஸ் ஃபிக்ஷன் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபாஸ் இதுவரை இல்லாத வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ‘உலக நாயகன்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். 

கே.ஜி.எஃப் இயக்குநரின் படம்..!

கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்து இயக்கி வரும் படம், சலார். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீராேவாக நடிக்கிறார். இவருக்கு வில்லனாக மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் வருகிறார். கே.ஜி.எஃப் படத்தை பாேல ஆக்ஷன்-த்ரில்லர் காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படம், கே.ஜி.எஃப் படத்தின் இன்னொரு இணைக்கதை (Spin-off) என்றும் சொல்லப்படுகிறது. இதில், பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.

பெரிய பட்ஜெட்-கம்மி லாபம்..

நடிகர் பிரபாஸ், முதன் முதலாக மாபெரும் ஹிட் கொடுத்த படமும் கடைசியாக ஹிட் கொடுத்த படமும் பாகுபலி மட்டுமே. அதை தவிர்த்து வெளியான பிற பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளன. கடைசியாக பிரபாஸின் நடிப்பில் வெளிவந்த ‘ஆதி புருஷ்’ திரைப்படம் இராமாயண கதையை தழுவி எடுக்கப்பட்டது. இதில், பிரபாஸ் ராமனாக நடித்திருந்தார். படம், சுமார் 700 கோடி செலவில் தயாரானது. ஆனால் படம் 300 கோடிகளை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பெரிய பட்ஜெட் பட நாயகனாக இருக்கும் பிரபாஸிற்கு சலார் மற்றும் கல்கி ஏடி 2898 ஆகிய படங்கள் திருப்பு முனைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | Jailer Audio Launch: ஜெயிலர் படத்தின் அனைத்து பாடல்களும் ரிலீஸ்..! மொத்தம் இத்தனை பாடல்களா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News