சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக்கொணடிருக்கும் படம், ஜெயிலர். ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் பல பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இதில், இன்னொரு பெரிய நடிகரும் நடிக்க இருந்தாராம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயிலர் படத்தின் கேமியோ கதாப்பாத்திரங்கள்:


ரஜினிகாந்த்தை தவிர ஜெயிலர் படத்தில் நடித்திருந்த முன்னணி நடிகர்கள் அனைவருமே காமியோ கதாப்பாத்திரத்தில்தான் வந்தனர். பிரபல நடிகை தமன்னா இப்படத்தில் முக்கிய கேரக்டராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ ‘காவாலா’ பாடலிற்கு மட்டும் நடனமாடிவிட்டு காற்றாேடு காற்றாக பறந்து விட்டார். படத்தில்,சில காட்சிகளில் மட்டுமே தலைக்காட்டி சென்றுள்ளார் தமன்னா. படத்தின் ஹீரோ, ரஜினியின் மாஸ் காட்சிகளுக்கு இணையாக கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் காட்சிகள் இருப்பதாக பேசப்படுகிறது. மலையாள நடிகர் மோகன்லாலின் நடிப்பிற்கும் விநாயகத்தின் வில்லத்தனத்திற்கும் ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். இவர்களை போலவே இன்னொரு தெலுங்கு நடிகரையும் நெல்சன் இந்த படத்தில் நடிக்க வைக்க இருந்தார். 


மேலும் படிக்க | அதுக்குள்ள இத்தனை கோடியா..! ரிலீஸான 2 நாட்களில் மாபெரும் வசூலை அள்ளிய ஜெயிலர்!



தெலுங்கு நடிகர்:


டோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களுள் மரண மாஸ் நடிகராக வலம் வருபவர், நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் நடிக்கும் படங்களில் காதல் காட்சிகள் இருக்கிறதோ இல்லையோ, சண்டை காட்சிகள் எக்கச்சக்கமாக இருக்கும். கன்னடம் மற்றும் தெலுங்கின் முன்னாள் சூப்பர் ஸ்டாராக விளங்கிய என்.டி.ராமாராவ்வின் மகன் இவர். தந்தையின் வழியை பிடித்து அப்படியே பின்பற்றிய இவர் 63 வயதிலும் தெலுங்கு சினிமாவின் நடிகராக விளங்குகிறார். இவருக்கு ஜெயிலர் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூறியுள்ளார். 


என்ன கதாப்பாத்திரம்..? 


நெல்சன் ஜெயிலர் ரிலீஸிற்கு பிறகு ஒரு பிரபல ஊடகத்தின் நேர்காணலில் கல்ந்து கொண்டார். இதில் படம் குறித்து பேசிய அவர், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை ஜெயிலர் படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும் ஆனால் அது நடக்காமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயிலர் படத்தில் ஒரு பயங்கர போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இருந்ததாகவும் ஆனால், அந்த கதாப்பாத்திரத்தை பாலகிருஷ்ணாவிற்கு ஏற்ற அளவிற்கு மாஸாக  தான்னால் வடிவமைக்க முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால்தான் அவரை ஜெயிலர் படத்தில் நடிக்க வைக்க முடியாமல் போனதாகவும் எதிர்காலத்தில் வேண்டுமானால் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார் நெல்சன். 


“சம்பவம் மிஸ் ஆயிருச்சே..”


நடிகர் பாலகிருஷ்ணா, சினிமாவில் மட்டுமன்றி அரசியலிலும் கோலோச்சும் நடிகர்களுள் ஒருவர். இவர், திரையில் மாஸாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னென்ன உடல் மொழிகள் மற்றும் முக பாவனைகளை பின்பற்றுகிறாரோ அதையே நிஜ வாழ்விலும் பின்பற்றுவார். இதனால் பல மேடை விழாக்களில் இவரை சுற்றி இருப்பவர்கள் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதுண்டு. இவர் செய்யும் செய்கைகள் பல ரசிகர்களுக்கு சிரிப்பு மூட்டுவதாக இருந்தாலும் அதை நன்றாகவே ரசிப்பர். இதனால், “இவரை ஜெயிலர் படத்தில் நடிக்க வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே..மிஸ் ஆயிடுச்சே..” என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


வசூல்:


ஜெயிலர், ரிலீஸான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வசூல் நிலவரம் 2வது நாளான நேற்று 75 கோடியாக இருந்ததாக கூறப்படுகிறது. இன்றைக்குள் படம் 150 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் 200 கோடியை எட்ட சில நாட்கள் ஆகலாம் எனக்கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ‘போர் தொழில்’ நாயகன் அசோக் செல்வனுக்கு டும் டும் டும்..! மனமகள் இவர்தான்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ