இரட்டை அர்த்த வரிகளுடன் ஜெயிலர் பட பாடல்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!
Jailer Second Single: ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடல் நேற்று வெளியானதை தொடர்ந்து அதில் இரட்டை அர்த்தங்கள் நிறைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இரண்டாவது பாடலான Hukum நேற்று வெளியானது. இதில், பிற திரையுலகினரை தாக்கும் வகையிலான இரட்டை அர்த்த வரிகள் இடம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜெயிலர் இரண்டாவது சிங்கள்:
ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹுக்கும்’ நேற்று வெளியானது. இந்த பாடலை சூப்பர் சுப்பு என்பவர் எழுதியிருந்தார். அனிருத்தின் துள்ளள் இசையில் உருவாகியிருந்த இந்த பாடல், தற்போது வரை 5.7 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. ‘தலைவரு நிரந்தரம்..அலப்பரை கெளப்புரோம்..’ என்ற வரிகளில் அப்பாடல் தொடங்கியிருந்தது. இந்த நிலையில், பிற தமிழ் சினிமா நடிகர்களை தாக்கும் வகையில் இந்த பாடல் உள்ளதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரட்டை அர்த்தங்கள்..!
ஜெயிலர் படத்தில் வரும் ரஜினியின் முத்துவேல் பாண்டியன் கதாப்பாத்திரம் மட்டுமல்லாது அவரின் உண்மை முகத்தையே இந்த பாடலில் வரிகளாக எழுதியுள்ளனர். இதில் குறிப்பாக “பேர தூக்க நாலும் பேரு.. அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு..” என்பது போன்ற வரி இடம் பெற்றிருக்கும். இது, தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் ஒருவரை தாக்கி எழுதப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
யார் அந்த நடிகர்..?
நடிகர் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என தமிழ் ரசிகர்கள் மத்தியல் எப்போதிருந்தோ பேச்சு அடிப்பட்டு வருகிறது. ரஜினி எந்த விழாவிற்கு சென்றாலும் தன் வாழ்க்கையில் நடைப்பெற்ற விஷயத்தையோ அல்லது எங்கோ கேட்ட கதையையோ ரசிகர்களிடம் கூறுவார். இதே பழக்கத்தை நடிகர் விஜய்யும் பின்பற்றி வருகிறார். விஜய் உள்பட பல படங்களில் முன்னணி நடிகர்கள் பலரும் அவரது ஸ்டைல் மற்றும் கதாப்பாத்திரங்களை ரெஃபரன்ஸாக வைத்து நடித்திருப்பர். விஜய் உள்பட பலரை தாக்கும் வகையில் “பேர தூக்க நாலும் பேரு…” என்ற வரி இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
3 தலைமுறை ரசிகர்களை குறிப்பிட்ட வரி..!
ஹுக்கும் பாடலில் முக்கியமாக குறிப்பிடும் வகையில் இன்னும் சில வரிகளும் இருந்தன. குறிப்பாக “உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..” என்ற வரி இடம் பெற்றுள்ளது. 70-80ஸ் கிட்ஸ், 90’ஸ் கிட்ஸ், இனி வரும் குழந்தைகள் என அனைவரையும் இந்த வரியில் மொத்தமாக குறிப்பிட்டுள்ளது.
இகழ்ந்தவர்களை தாக்கும் வகையிலான வரி..!
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவேன் என கூறிவிட்டு பின்னர் ஜகா வாங்கியவுடன் பலர் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அரசியல் கட்சிகள் உள்பட பலர் இவரை இகழ்ந்தனர். இவர்களை தாக்கும் வகையிலும் ஒரு வரி இந்த பாடலில் இடம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் மிம்ஸ்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். “நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்..
நீ குழிய பறிச்சு வச்சா இவன் மலையில் ஏறி நிப்பான்…” என்பதுதான் அந்த வரி.
படக்குழு:
ஜெயிலர் படத்தில் மூன்று திரையுலக சூப்பர் ஸ்டார்களும் சேர்ந்து நடித்துள்ளனர். கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து தெலுங்கு நடிகர் சுனிலும் நடித்துள்ளார். எப்போதுமே நெல்சன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வரும் ‘ரெடின் கிங்ஸ்லி’ இந்த படத்திலும் நடித்துள்ளார். படம், அடுத்த மாதம் 11ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ