Jailer 2nd Single: ஜெயிலர் 2வது சிங்கிள் அப்டேட்-‘Tiger Ka Hukum’ என்றால் என்ன?

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதை ஒட்டி, அதற்கான ப்ரமாே வீடியோ நேற்று வெளியானது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 16, 2023, 11:25 AM IST
  • ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலுக்கான ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
  • இந்த பாடலுக்கு “டைகர் கா ஹுக்கும்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு அர்த்தம் என்ன?
Jailer 2nd Single: ஜெயிலர் 2வது சிங்கிள் அப்டேட்-‘Tiger Ka Hukum’ என்றால் என்ன? title=

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது ப்ரமாே விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. ஜெயிலர் படத்தின் இந்த இரண்டாவது பாடலுக்கு ‘Hukkum’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘Tiger Ka Hukum’ என்றால் என்ன..? 

இரண்டாவது சிங்கிள்..

ரஜினிகாந்த்தின் 169ஆவது படமாக உருவாகியுள்ளது ‘ஜெயிலர்’. இந்த படத்தில் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான ‘காவாலா’ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஜனி மாஸடர் நடன அசைவுகளை கற்றுக்கொடுக்க தமன்னா அதற்கு ஏற்றார் போல ஆடியிருந்தார். அனிருத்தின் இசையில் உருவாகியிருந்த இந்த பாடல் பெரிய ஹிட் அடித்துள்ளது. இதைத்தொடர்ந்து அப்படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளது. 

மேலும் படிக்க | ‘நோலன் படத்தில் நடிப்பதற்காக பகவத் கீதையை படித்தேன்..’ ஹாலிவுட் நடிகரின் அசத்தலான பழக்கம்..!

ப்ரமோ வெளியீடு:

ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ‘Tiger Ka Hukum’ நாளை (ஜூலை 17) வெளியாகிறது. இதையொட்டி, படக்குழுவினர் நேற்று ஒரு ப்ரமோ வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதில், நடிகர் ரஜினி “ஏய், இங்க நான்தான் கிங். நான் வெச்சதுதான் சட்டம்..” என்று டைலாக் பேசுவது போல தொடங்குகிறது. 

இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களிலேயே பல லட்சம் வியூஸ்களை கடந்தது. இதையடுத்து, இப்பாடலின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இந்த பாடலுக்கு ‘Hukkum’ என பெயரிடப்பட்டுள்ளது ஏன்? அப்படி என்றால் அர்த்தம் என்ன? தெரிந்து கொள்வோமா? 

‘Tiger Ka Hukum’ என்றால் என்ன..? 

‘Hukum’ என்பது இந்தோனேசிய மொழியில் பயன்படுத்தும் வார்த்தையாக பார்க்கப்படுகிறது. Tiger ka hukum என்பதற்கு ‘புலியின் கட்டளை’ என்று அர்த்தம். காட்டில் இருக்கும் வலிமையான மிருகங்களும் புலியின் உருமலுக்கு அடி பணிவது போல வலிமையான நபர்கள் கூட இயற்கையின் விதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதை நமக்கு நினைவூட்டும் வலுவான சொற்றொடர் இது. 

நெல்சன் திலீப்குமாரின் சிக்னேச்சர் ஸ்டைல்..

ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிளில் ரஜினிகாந்த் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. நெல்சன், இதற்கு முன்னர் இயக்கியிருந்த ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிளையும் கதாநாயகனான விஜய் கையில் துப்பாக்கி இருப்பது போல இருக்கும் காட்சிகளை வைத்து வெளியிட்டிருந்தார். அதற்கு முன்னர் அவர் இயக்கியிருந்த ‘டாக்டர்’ படத்தின் இரண்டாவது சிங்கிளையும் அப்படியே வெளியிட்டிருந்தார். கோலமாவு கோகிலாவிலும் அதே கதைதான். அதனால், இரண்டாவது சிங்கிளில் கதையின் நாயகன்-நாயகி கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற காட்சிகளை இணைப்பதில் நெல்சன் குறியாக இருக்கிறார். இது, இவரது சிக்னேச்சர் ஸ்டைலாக பார்க்கப்படுகிறது. 

படக்குழு:

ஜெயிலர் படத்தில் மூன்று திரையுலக சூப்பர் ஸ்டார்களும் ஒன்றாக இணைந்துள்ளனர். கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மலையாளம் மற்றும் கண்ணட திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான மாேகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இதில் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், ஜாஃபர் சித்திக், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் படங்களுக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டிருந்த நடிகை தமன்னா, இதன் மூலம் கம்-பேக் கொடுத்துள்ளார். 

கதை இதுதானா..? 

சில நாட்களுக்கு முன்னர் ஜெயிலர் படத்தின் கதை என்ன என்பது குறித்த ஒரு தகவல் இணையத்தில் வட்டமடித்தது. அதில், படத்தின் நாயகனான முத்துவேல் பாண்டியன் (ரஜினி)  ஒரு ஜெயிலின் காவல் அதிகாரியாக வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர், அதிகாரியாக இருக்கும் ஜெயிலில் சிறையிடப்பட்டுள்ள கேங்ஸ்டர் கூட்டம் சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் போடுவதாகவும் அதை இவர் எப்படி தடுத்து நிறுத்துகிறார் என்பதும்தான் கதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

பட ரிலீஸ்..

ஜெயிலர் திரைப்படம், அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி வெளிவரும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | ‘அந்த இடத்தில் தொட்டுட்டாரு..’ ஷகிலாவிற்கு நேர்ந்த பாலியல் கொடுமை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News