ரஜினிக்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க வாங்கிய சம்பளம் இவ்வளவா..?
நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக நடித்து வருபவர், ரம்யா கிருஷ்ணன். இவர், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்துள்ளார். படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
ஜெயிலர் திரைப்படம்:
நயன்தாரா நடித்திருந்த ‘கோலமாவு கோகிலா’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்திற்கு பிறகு இவர் டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிளாக் காமெடி, கொலை, கடத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து படங்களை இயக்குபவர் நெல்சன். இளம் இயக்குநர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு நெல்சனுக்கும் அந்த வாய்ப்பினை கொடுத்தார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் வசந்த், விநாயகம், விடிவி கணேஷ், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். மலையாள நடிகர் மோகன் லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் இப்படத்தில் காமியோ கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். படம், இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
மேலும் படிக்க | “எதிர்பார்த்த மாதிரி இல்லையே..” ரசிகர்களை ஏமாற்றிய ஜெயிலர்? ட்விட்டர் விமர்சனம்!
ரஜினிக்கு மனைவியாக..
நடிகை ரம்யா கிருஷ்ணன், ரஜினிகாந்திற்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். கடைசியாக இவர்கள் இருவரும் 24 வருடங்களுக்கு முன்பு இணைந்து ‘படையப்பா’ படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு ஜெயிலர் படத்தில்தான் ஒன்றாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
சம்பள விவரம்:
திரையுலகில் பல ஆண்டுகளாக இருந்தாலும் பாகுபலி படத்தில் ‘ராஜமாதா’வாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகுதான் அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து ‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல..’ என டைலாக் பேசிய இவர், அப்படத்தில் அவருடன் சேர முடியாமல் தவிக்கும் வில்லியாக நடித்திருப்பார். கடைசியில் ரஜினியுடன் சேர அவருக்கு ஜெயிலர் படத்தில்தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக ரம்யா கிருஷ்னனுக்கு 80 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கிளில் பேசிக்கொள்கின்றனர்.
படையப்பா படத்தின் சம்பளம்:
ரம்யா கிருஷ்ணன் 1999ஆம் ஆண்டு நடித்திருந்த படையப்பா படத்தில் நடிப்பதற்காக அவருக்கு அப்போதே 12 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாம். ரஜினிகாந்திற்கு அப்படத்தில் 1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாக பேசப்படுகிறது. இப்போது ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு 150 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமன்னாவிற்கு இவ்வளவா..!
நடிகை தமன்னா, ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார். ஒரு பாடலுக்கு நடனமாடி கெளரவ தோற்றத்தில தோன்றிய இவருக்கு 3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இவர் மட்டுமன்றி மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் கோடிக்கணக்கில்தான் சம்பளம் வாங்கியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ