தமிழில் பல க்ளாசிக் படங்களை கொடுத்த இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் எஸ்.கே. வெற்றிச்செல்வன். அவர் தற்போது ஜெய்யை வைத்து எண்ணித்துணிக என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதுல்யா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் இந்தப் படத்துக்கு எடிட்டிங் செய்துள்ளார். Rain Of Arrows Entertainment தயாரித்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் மும்முரமாக நடந்து முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நா. முத்துக்குமார் - மழை நின்ற பிறகும் தூறிக்கொண்டிருப்பவர்


இந்தச் சூழலில் படமானது ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் இன்று நடந்தது.



இந்த விழாவில் வெற்றிச்செல்வனின் குருநாதரான வசந்த், க/பெ ரணசிங்கம் பட இயக்குநர் விருமாண்டி, டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், அடங்காதே பட இயக்குநர் ஷண்முகம் முத்துசாமி, இசையமைப்பாளர் சாம் சிஎஸ், ஜெய், அதுல்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 



ட்ரெய்லரையும், பாடல்களையும் வசந்த் வெளியிட்டார். தமிழ்நாடே அலறும்படி ஒரு சம்பவம் செய்யப்போகிறேன் என தொடங்கும் ட்ரெய்லரை பார்க்கும்போது எண்ணித்துணிக படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருப்பது தெரிகிறது. ஜெய்யை பொறுத்தவரை தனது நடிப்பில் மேலும் மெனக்கெட்டிருக்கிறார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருக்கின்றன. கார்த்திக் நேத்தா, வித்யா தாமோதரன், சாம் சிஎஸ் ஆகியோர் தலா ஒரு பாடலை எழுதியிருக்கின்றனர். 


 



ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. எனவே எண்ணித்துணிக படம் அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்! தி கிரே மேன் விமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ