ஜமா எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்துள்ளது: அம்மு அபிராமி
ஜமா எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்து, என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.
நடிகை அம்மு அபிராமி பல நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது இந்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி, 2024 அன்று வெளிவரவிருக்கும் ‘ஜமா’ திரைப்படத்திலும் இவர் நம்பிக்கைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | நயன்தாராவின் 'அன்னபூரணி' படத்தை உங்கள் ஜீ தமிழில் பார்க்கலாம்! எப்போது தெரியுமா?
இந்நிலையில் படம் குறித்து நடிகை அம்மு அபிராமி கூறியதாவது, "எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ’ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை அளித்துள்ளது, இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இசையமைப்பாளர் இளையராஜா சாரின் இசையில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக இருக்கும். எனக்கு அது ‘நீ இருக்கும் உசரத்துக்கு’ பாடல் மூலம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார்.
நடிகர் சேத்தன் கூறும்போது, ”இதுபோன்ற அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய பாரி இளவழகன் மற்றும் எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்கள் இருவரையும் முதலில் பாராட்டுகிறேன். கோல்ட்- ப்ளெட்டட் க்ரைம்-த்ரில்லர் அல்லது மேற்கத்திய கருப்பொருளை கதைக்களமாகத் தேர்ந்தெடுப்பது பல புது இயக்குநர்களின் பொதுவான நடைமுறையாகிவிட்ட நிலையில், நமது கலாச்சாரத்தின் நெறிமுறை அழகியலை கதையாக்கிய பாரியின் துணிச்சலான முடிவு தனித்துவமானது. ஒரு இயக்குநராக, அவர் அதிக உயரங்களை அடைவதோடு சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் அங்கீகரிக்கப்படுவார். வெற்றிமாறன் சாரின் விடுதலைப் படத்திற்குப் பிறகு, ‘ஜமா’ படத்தில் வலுவான கதாபாத்திரம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். திரையரங்குகளில் இருக்கும் ஒவ்வொரு பார்வையாளர்களின் இதயத்தையும் தொடும் படம் இது" என்றார்.
இந்த படத்தை பரி இளவழகன் இயக்கி இருக்கிறார் மற்றும் முன்பு ‘கூழாங்கல்’ படத்தைத் தயாரித்த எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட்டின் எஸ். சாய் தேவானந்த், எஸ். சசிகலா, எஸ். சாய் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். பிக்சர் பாக்ஸ் நிறுவனத்தின் அலெக்சாண்டர் ஆகஸ்ட் 2, 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுகிறார்.
மேலும் படிக்க | ஓடிடியில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் டாப் 8 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் காணலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ