ஜவான் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும்? வெளியானது தேதி!
Jawan OTT Release Date: சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜவான் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதிக்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
ஷாருக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ஜவான் திரைப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. அட்லீ இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது. ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் ஏற்கனவே பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது, இதை தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு மற்றொரு உற்சாகமான செய்தி வெளியாகி உள்ளது. இந்த படம் விரைவில் OTT பிரீமியர்க்கு தயாராகி வருகிறது. நெட்ஃபிக்ஸ் நிறுவனம் ஜவான் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றி உள்ளது. ஷாருக்கான் பிறந்தநாளான நவம்பர் 2 அன்று Netflixல் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக இப்படம் அமைய உள்ளது. ஜவான் படம் இன்னும் சில திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7: எவிக்ட் ஆன யுகேந்திரன்-வினுஷாவிற்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஜவான் படம் வெளியான முதல் நாளில் 75 கோடி வசூல் செய்தது. இப்படம் இந்தியாவில் சுமார் ரூ.627 கோடியும், உலகம் முழுவதும் ரூ.1125 கோடியும் வசூல் செய்துள்ளது. எந்தவொரு இந்தியப் படத்திற்கும் கிடைக்காத வகையில் மிகப்பெரிய விலையில், ஜவான் ஸ்ட்ரீமிங் ரைட்ஸ் விற்பனை ஆகியுள்ளது. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்கு Netflix இந்த படத்தை வாங்கி உள்ளது. பொதுவாக படம் வெளியாகி 4 வாரங்களில் Netflix படத்தை வெளியிடும், ஆனால் ஜவான் படத்தை 8 வாரங்களுக்கு பிறகு வெளியிடுகிறது. ஜவான் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியப் படமாக உருவெடுத்துள்ளது மற்றும் ஷாருக்கின் கேரியரில் மிகப்பெரிய படமாக உள்ளது. OTTயிலும் மேலும் சில சாதனைகளை படைக்க உள்ளது.
பாலிவுட் படத்தில் நயன்தாரா இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை. இப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, ரித்தி டோக்ரா, சுனில் குரோவர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்தபடியாக ஷாருக்கான் நடித்துள்ள டன்கி படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. முன்னதாக டன்கி படம் தள்ளிப்போக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிய இன்னும் கால அவகாசம் தேவைபடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், படக்குழு இதனை நிராகரித்து திட்டமிட்டபடி வெளியாகும் என்று கூறியுள்ளது.
இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடியைத் தாண்டி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது வெற்றி படமாக டன்கி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "ஜனவரி 26, குடியரசு தினத்தன்று பதான் வெளியானது, பின்னர் ஜன்மாஷ்டமி அன்று ஜவான் வெளியானது, இப்போது புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டதால், டன்கி வெளியிடுவோம்" என்று ஷாருக்கான் கூறி இருந்தார். இதைத் தொடர்ந்து சல்மான் கானின் டைகர் 3 தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | அம்மாடியோ..ராகவா லாரன்ஸின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ