பாலிவுட்டிலும் ஜெயித்தாரா அட்லீ..? ஜவான் படம் எப்படி..? முழு விமர்சனம் இதோ!
Jawan Movie Review In Tamil: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் எப்படியிருக்கிறது? முழு விமர்சனம் இங்கே.
‘பாலிவுட் பாட்ஷா’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் ஹீரோவாக கலக்கியுள்ள படம், ஜவான். இந்த படத்தில் நயன்தாரா, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா என பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா அளவில் வெளியாகியிருந்த ஜவான் படத்திற்காக பலர் காத்துக்கொண்டிருந்தனர். உண்மையாகவே படம் எப்படியுள்ளது? முழு விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
கதையின் கரு:
தனது பண ஆதாயத்திற்காக நாட்டையே சுடுகாடாக மாற்ற முயற்சிக்கிறான் வில்லன். அவனால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி கூட்டாக அவனை அழிக்க முயற்சிக்கிறார் ஹீரோ. இதுதான் படத்தின் கரு. இடையிடையே சில திகைப்பூட்டாத ட்விஸ்ட். பழகிப்போன அதே பழிவாங்கல்கள். ஆனாலும் நேர்த்தியான காட்சியமைப்பு படத்தில் உள்ளதால், அதவே திரைக்கதையை காெஞ்சம் சுவாரஸ்யமாக்குகிறது.
ஒரு பக்கம் ‘அசாத்’ கதாப்பாத்திரத்தில் போலீஸாகவும், இன்னொரு பக்கம் நியாயத்திற்காக வன்முறையை கையில் எடுக்கும் பெண் கைதிகள் கூட்டத்தின் தலைனாகவும் தனக்கான வேலையை செவ்வனே செய்து கொடுத்திருக்கிறார் ஷாருக். அப்பா ஷாருக்காக ‘விக்ரம் ராத்தோர்’ கேரக்டரிலும் கைதட்டல் பெறுகிறார். ‘வயதானாலும் என் ஸ்டைலும் அழகும் இன்னும் போகல’ என்பதை சண்டை காட்சிகளில் நிரூபிக்கிறார். விஜய் சேதுபதியை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கியிருக்கலாம். நயன்தாராவை பிகில் படத்தில் எந்த அளவிற்கு உபயோகித்தனரோ அதே அளவிற்கே ஜவான் படத்திலும் உபயோகித்திருக்கின்றனர். தீபிகா படுகோன், சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களின் கண்களை கலங்க வைத்துவிட்டு செல்கிறார்.
மேலும் படிக்க | இணையத்தில் லீக் ஆன ஜவான் HD ப்ரிண்ட்.. அதிர்ச்சியில் படக்குழு!
முதல் பாதிக்கு பாஸ் மார்க்..
‘ஜவான்’ படத்தின் முதல் பாதியில் சண்டை, காதல், கொஞ்சம் ஃப்ளாஷ்பேக் என்று கதை பயணிக்கிறது. பழகி புளித்தப்போன காட்சிகளை காண்பித்திருந்தாலும், அதை போர் அடிக்காமல் கொண்டு சென்ற அடலீக்கு பாராட்டுக்கள். வெட்டல்-ஒட்டல் படத்தின் முதல் பாதியில் மட்டுமே கச்சிதம். அடுத்த பாதி, முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. படத்தில், ஒரு இடத்தில் மயிர்கூச்சரிய வைக்கும் காட்சிகளை வைத்திருந்தால் ரசிக்கும் படி இருந்திருக்கும். ஆனால், ஷாருக்கானை கேமராவில் காண்பிக்கும் போதெல்லாம் மாஸ் பி.ஜி.எம் வருவதும், க்ளோஸ் ஃப்ரேம் வைப்பதும் கொஞ்சம் மிகையாகவே தோன்றுகிறது. முதல் பாதி முடிந்தவுடன் ‘போர் அடிக்கவே இல்லையே..’ என்று கூறும் ரசிகர்கள் படத்தை முழுமையாக பார்த்தவுடன் ‘கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ...’ என்று யோசிக்கின்றனர். படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.
ரசிக்கும்படியான அம்சங்கள்:
ஷாருக்கானின் நடிப்பு, நயன்தாராவின் வசீகரத்தை தவிர படத்தில் ரசிக்கும்படியான அம்சங்களும் சில உள்ளன. சண்டை காட்சிகளில் நல்ல நேர்த்தி, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசுவிற்கு பாராட்டுகள். எல்லா படங்களிலும் போல இந்த படத்திலும் ஹீரோயிசத்தில் காமெடியை கலந்து தெளிக்க முயற்சி செய்கிறார் ஷாருக். சில இடங்களில் அது ரசிகர்களுக்கு சிரிப்பையும் பல இடங்களில் வெறுப்பையும் வரவழைக்கிறது. படத்தில் ஹீரோ-வில்லன் என யாரையும் விட்டு வைக்காமல் அனைவருக்கும் காமெடி-கவுண்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது, சீரியஸாக படம் பார்க்கும் ரசிகர்களை கொஞ்சம் கலகலக்க வைக்கிறது.
லாஜிக் இருக்கா பாஸ்..?
படத்தில், நயன்தாரா-ஷாருக்கானிற்கு இடையேயான காதல் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. தான் தேடும் குற்றவாளி இவர்தான் என்றே அறியாமல் அவரை திருமணம் செய்து கொள்ளும் நர்மாதாவிடம் (நயன்தாரா) “இவ்ளோ தத்தியா இருக்கியேம்மா..” என்று சொல்ல தோன்றுகிறது. வில்லன் எவ்வளவு சுட்டாலும் ஹீரோவிற்கு ஒன்றும் ஆகாது என்பது இந்திய சினிமாவின் நியதி. அதை இந்த படத்திலும் கடைபிடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவிற்கு க்ளாப்ஸ்..
ஒரு படம் எப்படியிருக்க போகிறது என்பதை ஆரம்ப காட்சியை வைத்தே சொல்லி விடலாம் என்று கூறுவார்கள். அப்படி ஜவான் படத்திலும், ஆரம்ப காட்சியிலேயே ரசிகர்களை கொஞ்சம் ஜர்க் ஆக்குகிறார். அட்லீ. அட்லீயுடன் இதற்கு முன்னர் பிகில் மற்றும் மெர்சல் படங்களில் கைக்கோர்த்த ஜி.கே விஷ்ணு, இந்த படத்திலும் அவருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். படமும், அவரது கடின உழைப்பிற்கு ஏற்ப, பக்காவாக வந்துள்ளது. ஷாருக்கானை முதன் முதலாக காட்டும் காட்சியில் அவரது கண்கள், உதடு, கை என அனைத்திற்கும் ஜும் வைத்து மாஸாக காண்பித்ததற்கு, தனி க்ளாப்ஸ் கொடுக்க வேண்டும்.
வேறு படத்தின் சாயல் இருக்கிறதா..?
அட்லீ படம் என்றாலே அதில் ஏதாவது ஒரு படத்தின் சாயல் இருக்கும் என்ற சந்தேகம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உண்டு. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வாெரு சம்பவத்தை செய்து வைக்கிறார். அதே போல ஜவான் படத்திலும் ரமணா, கத்தி போன்ற படங்களை நினைவூட்டுகின்றன. “எல்லாமே விஜய் அண்ணாவாலத்தான்..” என்று சொல்லி சொல்லி அவர் படத்தில் இருக்கும் காட்சிகளையே காப்பி அடிப்பது நியாயமா சார்?
பாடல்களில் கொஞ்சம் கவனம்..
ஜவான் படம் இந்தி மட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழ் பாடல்கள் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. சண்டை காட்சிகள் மற்றும் வில்லன்-ஹீரோவை காண்பிக்கும் போது வரும் பின்னணி இசை அபாரம். பாடல்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மேலும் படிக்க | Jawan Review: ஜவான் படம் எப்படி இருக்கு? டாப் ட்விட்டர் விமர்சனம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ