ஜவான் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்வது எப்போது? வெளியான தகவல்!

ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பது உறுதியாகி உள்ளது.  சென்னையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Aug 23, 2022, 09:22 AM IST
  • ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
  • விஜய் சேதுபதி இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
  • நடிகர் விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜவான் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்வது எப்போது? வெளியான தகவல்! title=

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.  ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், மேலும் படத்தில் யோகி பாபு மற்றும் ப்ரியாமணி ஆகியோர் நடிக்கின்றனர், இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வட இந்தியாவில் நடத்தி முடிக்கப்பட்டு தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் வருகிற ஆகஸ்ட்-24ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.  மாஸ்டர், உபென்னா மற்றும் விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.  இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் சேதுபதியின் பிஆர்ஓ இணையதள பக்கத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

தற்போது சென்னையில் நடக்கவுள்ள ஜவான் படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கலந்துகொள்ள இருக்கிறார்.  மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோனே ஒப்பந்தமாகியுள்ளதாக சில செய்திகள் வெளியானது, தற்போது அவரும் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஷாரூக்கானுடன், தீபிகா படுகோனே சென்னை வந்து இறங்கியுள்ளார்.  'ஜவான்' படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது, அதாவது அப்பா மற்றும் மகனாக நடிக்கிறார் என்றும் அதில் அப்பாவாக நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார் என்றும் மகனாக நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்றும் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | நிர்வாண புகைப்படம் - ஆஜராக அவகாசம் கேட்ட ரன்வீர் சிங்

மேலும் இந்த படத்தில் தளபதி விஜய்யை சிறப்பு வேடத்தில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக பல செய்திகளில் வெளியானது.  தற்போது விஜய் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டால் சென்னையில் நடைபெற போகும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் அடுத்த இரண்டு வாரங்களில் அவர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படத்தை 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.

மேலும் படிக்க | மீண்டும் இணைந்த தனுஷ்-ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News