கடந்த 2015ம் ஆண்டு எம்.ராஜா இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் தனி ஒருவன்.  இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, நயன்தாரா, தம்பி ராமையா, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், அபிநயா போன்ற பலர் நடித்திருந்தனர்.  இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.  இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய திரைப்படங்கள்!


 


இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அரவிந்த்சாமியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.  ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த ஆக்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படத்தில் இடையிடையே ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் கலந்த காதல் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்தது.  ஜெயம் ரவி மற்றும் அரவிந்தசாமி கேரியரில் இந்த படம் சிறந்த மைல்கல்லாக அமைந்தது என்று கூறலாம்.



தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜெயம் ரவி - நயன்தாரா ஜோடி மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.  இந்த திரைப்படத்தை வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஹமத் தான் இயக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.  மேலும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.  விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இதில் நடிக்கப்போகும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் படிக்க | பொள்ளாச்சி சம்பவம் தான் எதற்கும் துணிந்தவன் படமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR