இளையதளபதி விஜய் - நெல்சன் திலிப்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ’பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் பெயருக்கு ஏற்றார்போல் இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே வெளியான ’பீஸ்ட்’ படத்தின் அரபிக்குத்து பாடல் உலகளவில் மெஹா ஹிட் அடித்துள்ளது. தமிழ் மொழியைக் கடந்து மற்ற மொழி ரசிகர்களையும் இப்பாடல் ஈர்த்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரெண்டுல ஒன்னு பாக்கலாம்..! வெளியானது ஜாலியோ ஜிம் கானா பாடல்!


இப்பாடலை நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். பாடல் வெளியாவதற்கு முன்பே, அரபிக்குத்து பாடலுக்கு வெளியிடப்பட்ட புரோமோவும் ஹிட் அடித்தது. படம் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே இருப்பதால், அடுத்தடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, படத்தின் செகண்ட் சிங்கிள் ‘ஜாலிலோ ஜிம்கானா’ முத்தாய்ப்பாக வந்துள்ளது. இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், இளையதளபதி விஜய், இப்பாடலை பாடியுள்ளார்.


 



கலகலப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜாலிலோ ஜிம்கானா பாடல், நேற்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் யூ டியூபில் வெளியிட்டது. செம ஜாலியாக உள்ள இந்தப் பாடலுக்கு நடிகர் விஜயுடன் சேர்ந்து நெல்சன் திலிப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிரூத் ஆகியோரும் நடனமாடியுள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு டான்ஸர் விஜயை பார்க்க முடிவதாக இப்பாடல் வெளியீட்டுக்குப் பின்பு ரசிகர்கள் மெய்சிலிர்த்து கமெண்ட் அடித்து வருகின்றனர். பாடல் வெளியாகி இன்னும் 24 மணி நேரம்கூட ஆகாத நிலையில் இதுவரை 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து ஜாலிலோ ஜிம்கானா அசத்தியுள்ளது. அரபிக் குத்து பாடல் 178 மில்லியன் பார்வைகளைக் கடந்திருக்கும் நிலையில், அதற்கு அருகிலாவது இப்பாடலும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் பீஸ்ட் பாடல்கள், ரசிகர்களின் ஹார்டில் நச்சுனு இடம்பிடித்துள்ளது. 


மேலும் படிக்க | ‘RRR’ க்கு இப்படியொரு அரசு சலுகையா?!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR