ஜூனியர் என்.டி.ஆர்-ருக்கு கொரோனா தொற்று உறுதி: குடும்பத்துடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்
ஜூனியர் என்.டி.ஆர்-ருக்கு கொரோனா தொற்று உறுதி: குடும்பத்துடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளும் கடும் பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கின்றன. பாரபட்சம் இல்லாமல் இந்த தொற்று அனைவரையும் தன் பிடியில் சிக்க வைத்துள்ளது. தினமும் பல பிரபலங்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய செய்திகளை நாம் கேட்டு வருகிறோம்.
இந்த நிலையில், டோலிவுட் மாஸ் ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு (Junior NTR) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை தனது ட்விட்டர் கணக்கிலிருந்து ஜூனியர் என்.டி.ஆர் பகிர்ந்துகொண்டார். இதைப் பற்றிய கூறிய அவர், " எனக்கு கோவிட் 19 (COVID 19) நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. யாரும் கவலைபப்ட வேண்டாம். நான் நன்றாக உள்ளேன். நானும் என்னுடைய குடும்பமும் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டு (Quarantine) உள்ளோம். மருத்துவர்களின் மேற்பார்வையில் அனைத்து நெறிமுறைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். கடந்த சில நாட்களில் என்னுடம் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை சோதித்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள் " என்று எழுதியுள்ளார்.
ALSO READ: கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடிகை மாளவிகா செய்த உதவி!
ஜூனியர் என்.டி.ஆர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுளி இயக்கும் காவிய ஃபாண்டசி படமான 'ஆர்.ஆர்.ஆர்' -ல் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் ராம் சரண் தேஜாவும் நடிக்கிறார். இது தவிர தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்படவுள்ள ஒரு படத்தில் நடிக்கவும் அவர் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், சில முன்னணி இயக்குனர்களிடம் சில படங்களுக்கான கதைகளையும் அவர் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,66,161 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 3,754 பேர் இறந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2.26 கோடியாக அதிகரித்துள்ளது.
ALSO READ: உயிருக்கு போராடிய கொரோனா நோயாளிக்கு சோனு சூத் விமானம் அனுப்பி உதவி!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR