தளபதி 68: நடிகர் விஜய் விரைவில் நடிக்க உள்ள படம், தளபதி 68. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜாேடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய்-ஜோதிகா படங்கள்:


2000ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ படத்தில் முதன்முறையாக விஜய்-ஜோதிகா இணைந்து நடித்தனர். இவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. இதையடுத்து இவர்கள் இருவரும் 2003ஆம் ஆண்டு ‘திருமலை’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். 2006ஆம் ஆண்டு, தன் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை ஜோதிகா நிறுத்திவிட்டார். 2015ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே மூலம் கம்-பேக் கொடுத்தார். திருமலை படத்திற்கு பிறகு விஜய்-ஜோதிகாவிற்கு வேறு படங்களில் இணைந்து நடிக்க வில்லை. ஜோதிகா சினிமாவிற்குள் மறுபிரவேசம் செய்த பிறகு அவரை விஜய் படத்தில் நடிக்க வைக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால் அது நடைபெறாமல் போனது. 


மேலும் படிக்க | ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!


விஜய் படங்களில நடிக்க மறுத்த ஜோதிகா? 


அட்லி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியான படம், மெர்சல். இதில், விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இதில், ஃப்ளாஷ் பேக்கில் வரும் தந்தை விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருப்பார். இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க முதலில் ஜோதிகாவை அணுகினர். ஆனால், அவர் அந்த கேரக்டரில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 


‘லியோ’ படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள படம் ‘தளபதி 68’. இந்த படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. ஒரு விஜய் வயது முதிர்ந்த கதாப்பாத்திரத்திலும் இன்னொரு விஜய் இளைஞராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதில், வயது முதிர்ந்த விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்றதாம். ஆனால் அவர் இந்த முறையும் விஜய்யுடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 


என்ன காரணம்? 


தளபதி 68 படத்தில் இளைஞராக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க புது கதாநாயகி பிரியங்கா மோகன் ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இன்னொரு கதாநாயகியாகக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காதோ என்று எண்ணி ஜோதிகா இதில் நடிக்க மறுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கான உண்மையான காரணம் குறித்து ஜோதிகாவே வாய்திறந்தால்தான் தெரியும். 


வேறு கதாநாயகி…


ஜோதிகா மறுத்துள்ள கதாப்பாத்திரத்தில் நடிக்க சிம்ரன் அல்லது சினேகாவை தளபதி 68 படக்குழுவினர் அணுகியுள்ளனர். நடிகை சிம்ரன் மற்றும் விஜய் இணைந்து 5 க்கும மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். அந்த படங்கள் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. நடிகை சினேகா விஜய்யுடன் ‘வசீகரா’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். 


அமெரிக்காவில் தளபதி 68 படக்குழுவினர்:


தளபதி 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அமெரிக்காவிற்கு லுக் டெஸ்டிற்காக சென்றுள்ளனர். மேலும், படத்திற்கான கிராஃபிக்ஸ் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. 


நேற்று முன்தினம் நடிகர் விஜய் தி ஈக்குவலைஸர் படத்தை நியூயார்கில் உள்ள ஒரு திரையரங்கில் கண்டு களித்தார். அவர், அப்படத்தின் நாயகன் Denzel Washington-ன் ரசிகராக மாறிய தருணத்தை வெங்கட் பிரபு புகைப்படம் எடுத்திருந்தார். இந்த பாேட்டோ கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | ஹாலிவுட் நடிகரின் ரசிகராக மாறிய விஜய்..! யார் இந்த டான்சல் வாஷிங்டன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ