நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் (Coronavirus) பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் (Tamil Nadu) 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ALSO READ | நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி


அந்தவகையில் தற்போது பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் (Bhagyaraj) மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகின்றனர். 


மேலும் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரிடமும் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


 



 


சாந்தனு பாக்யராஜின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற்று வீடு திரும்பி விடுவார்கள் என அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகிய இருவரும் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR