காலா! 40 நிமிடம் பேஸ்புக்கில் லைவ் செய்த நபர் கைது!!
சிங்கப்பூரில் காலா படத்தை பார்க்க சென்ற ஒருவர் தியேட்டரில் இருந்து பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். அந்த நவரை தற்போது போலீசார் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் காலா படத்தை பார்க்க சென்ற ஒருவர் தியேட்டரில் இருந்து பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். அந்த நவரை தற்போது போலீசார் கைது செய்தனர்.
கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மேலும் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. உலகம் முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியானது. காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் வெளியானது.
இந்நிலையில் சிங்கப்பூரில் படம் பார்க்க சென்ற ஒருவர் தியேட்டரில் இருந்து காலா படம் பேஸ்புக்கில் நேரடியாக 40 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி சிங்கப்பூர் வினியோகஸ்தர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்ததும் போலீசார் விரைந்து சென்று பேஸ்புக்கில் காலா படத்தை ஒளிபரப்பிய வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் பிரவீன் என்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.