இந்தியா மற்றும் உலக அளவில் சாதனை படைத்த ரஜினியின் `கபாலி` டீசர்!!!!.
பா.ரஞ்சித் இயக்கியத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கபாலி'யின் டீஸர் வெளியிடப்பட்டது. டீஸர் மே 1ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்படதால் அனைவரும் டீஸர்காக காத்துகொண்டு இருந்தார்கள். காலை 11மணி அளவில் டீஸர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கானோர் பார்த்ததால் சமுக வலைதளமே ஒரு சில நிமிடம் ஸ்தம்பத்தி போனது. ரசிகர்கள் மற்ற அனைவருமே வாழ்த்துக்கள் கூறி வருகின்றன மேலும் திரையுலக நடிகர் நடிகைகள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
டீஸர் ரஜினி கூறும் "கபாலிடா" "மகிழ்சி" போன்ற வார்த்தைகள் சமுக வலைதளங்களில் ரொம்ப பிரபலமாகியுள்ளது. மேலும் #KabaliTeaser ஹேஷ்டேக் இந்தியா மற்றும் உலக அளவில் ட்ரெண்ட்டானது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்தார்கள். கடைசியா கிடைத்த நிலவரப்படி 50லட்சத்திருக்கு மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர் என்றும் கிட்டதட்ட 3லட்சம் பேர் லைக் செய்திருகிறாக்கள் என்று தகவல் வந்து கொண்டி இருக்கிறது.
மேலும் இப்படத்தை பற்றி தயாளிப்பாளர் தாணு கூறும் போது உலக அளவில் சாதனை படைத்து வரும் "கபாலி" டீஜர். அனைத்து ரெகார்ட்களையும் உடைக்கும் இது ஒன் அண்ட் ஒன்லி தலைவராலே மட்டுமே முடியும். இது தான் தலைவர் ஸ்டைல். இந்த ஸ்டைல் மட்டுமே அனைத்து சாதனை உடைக்கும் என்றும் மேலும் அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் தாணு தயாரித்திருக்கும் இப்படத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிகின்றன, மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கபாலி டீசர் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளதாகவும் படம் எப்போ திரைக்கு வரும் என அனைவரும் காத்துக்கொண்டு இருப்பதாக சமுக வலைதளங்களில் கருத்துகள் பரிமாறப்படுகிறது.